மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் ( ஐடி அல்லாத) ஒயிட்காலர் வேலை செய்பவர்களுக்கு "ரோபாடிக்ஸ்" ரூபத்தில் புதிதாக இன்னோரு தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது. காரணம் ? எல்லாம் பணம் படுத்தும்பாடு தான்.
நான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பதுமெயின்பிரேம் கனிணி. அதில்தான் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் இருக்கின்றன. பல ஆயிரம் பேர் பயன்படுத்திகிறார்கள். ஆனால், முப்பது வருடம் அரத பழசுனாது. அதன் நிரல்களை (program) மேம்படுத்தி புதுப்பிப்பதென்றால் ஐபிஎம் நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் தெண்டம் அழவேண்டும். பெரும் செலவு செய்து புதுப்பிப்பதற்கு பதிலாகதான் "ரோபாடிக்ஸ்" எனும் புதிய தொழில் நுட்பத்தை அதனுடன் ஒத்திசைவாக பயன்படுத்த இருக்கிறார்கள்.
இந்த ரோபாடிக்ஸ் புரோகிராம்கள் இப்போழுது நாள் முழுவதும் மனிதர்கள் மெயின் பிரேம் கம்யூட்டர்களை வைத்து செய்து கொண்டிருக்கும் வேலையை ஒரு சில நிமிடங்களில் அசால்டாக செய்து முடித்துவிடும். அதனால் கணிசமானவர்கள் இன்னும் ஒரிரு வருடங்களில் வேலையை இழக்கப்போவது உறுதி.
இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் நன்கு படித்த வோயிட் காலர் வேலைபார்ப்பவர்கள் தான். இருந்தாலும் வேறு வழியில்லை. ஐடி துறையில் அடிக்கும் இந்த புதிய அலை குப்பை கூளங்களுக்கும், புத்தகத்துக்கும் வித்தியாசமா பார்க்கப்போகிறது ?
இங்கே இருக்கும் அமெரிக்க நண்பர்கள் பலரிடமும் பேசினேன். எல்லோரும் பொதுவாக சொல்லும் ஒரு விசயம். பெருநிறுவனங்கள் தங்கள் செலவினத்தை குறைத்து வருமானத்தைப் பெருக்க
ஏதோ ஒரு விதத்தில் புதிய தொழில்நுட்பத்தைத் தேடி தேடி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.
இனி வரும் நாட்களில் மனிதர்களின் இடத்தை கம்யூட்டர்கள் முழுமையாக நிரப்பிவிடுமா ? எனும் விவாதத்துக்குள் நாம்
இப்போதைக்குப் போகத் தேவையில்லை. ஆனால், இயந்திரங்களால் செய்ய முடியாத வேலை என்று ஒன்று இருந்தால் அதைத் தேடிக் கொள்வது உசிதம்.
அழிவை நோக்கி...
ReplyDeleteபேரழிவை நோக்கி...
வேறுவழி. காலத்துக்கு தகுந்தார்போல் நாம் தகவமைத்துக் கொள்ளவேண்டும்.
Deleteஆம், தினந்தோறும் ஒரு புதிய அறிமுகம் கணினித்துறையில் நடந்துகொண்டிருக்கிறது. நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவதற்கு நிரல் எழுதிக்கொண்டிருக்கிறது இன்றைய கணினித்துறை. எனவே வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிச்சயம் திடமாகவே தெரிகிறது.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி.
நிறைய விசயங்கள் நடக்கின்றன. வெறும் பட்டப்படிப்பு என்பது இனி உதவாது.
Deleteவளர்ச்சி என்னும் பெயரில்
ReplyDeleteஆட்குறைப்பு
ஒரு சிலர் வாழ
மற்றோரெல்லாம் வாட வேண்டியதாகிறது
கார்பரேட் நிறுவனங்களின் தாரக மந்திரம்.
Deleteபங்குதாரர்களின் நலன் காப்பதே!