நமது அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் திறந்துவிடதான் மறுக்கிறார்களே தவிர, சங்ககால தமிழ் வார்த்தைகளை அல்ல எனச் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நிறைய தமிழ்ச் சொற்கள் நிரம்பிக்கிடக்கின்றன எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எழுத்தாளர் சுஜாதா திராவிட மொழிகளில் தமிழின் தாக்கம் குறித்து "கற்றதும் பெற்றதும்" தொடரில் பதிவு செய்தது உங்களுக்காக.
//
தமிழின் பல சங்க கால வார்த்தைகள், மற்ற திராவிட மொழிகளில் அன்றாட வார்த்தைகளாக உள்ளன
என்பதை அம்மொழிகளின் திரைப்படங்களைப் பார்க்க நேரும்போதெல்லாம் யோசிப்பேன்.
"இல்லு" என்ற சொல் நம் இல்லத்திலிருந்து அனுப்பியது. அதே போல இன்றைய தெலுங்கில் "நச்சி" என்ற வார்த்தை, "விரும்புதல்" என்ற பொருளில் பயன்படுகிறது. "நீர்க்கோல வாழ்வை நச்சி" என்ற கம்பராமயணப் பாடலில் உள்ள நச்சுதல் அது.
"மனை" நம்மிடம் அழைப்பிதழ்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதைக் கன்னடத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டைக் கட்டிக்கொண்டோம். அகமும் புறமும் மலையாளத்தில் இன்று அன்றாட வார்த்தைகளாகி, நம் உள்ளேயிருந்து வெளியே போய்விட்டன.
//
அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய்மொழி தமிழ்
என்பது ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது தானே.
தமிழ்ன் என்பதில் பெருமை கொள்வோம்
ReplyDeleteநம் பெருமையை நாம்தான் பேசிக்கொள்கிறோம். தெலுங்கர்களோ, கன்னடர்களோ, ஏன், மலையாளிகளோ அதை அங்கீகரிக்கிறார்களா? ஹைதராபதிலும், பெங்களூரிலும், மங்களூரிலும் கணிசமான ஆண்டுகள் பணிசெய்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். தமிழைத் தங்களுடையதை விடச் சிறந்த மொழியாக அவர்கள் பேசுவதேயில்லை.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
இருக்கலாம். அவர்கள் தமிழை, தமிழர்களை உயர்ந்த மொழி அல்லது உயர்ந்தவர்கள் என நினைக்கத் தேவையில்லை. தமிழர்களையும் சகமனிதர்களாக மதித்து அணுசரித்து போனால் போதும். சரிதானே ?
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கு நன்றி!
DeleteTamil - Arisi, Greek - Ryzi, English - Rice
ReplyDelete