Saturday, May 19, 2018

அது என்ன ஜீ ?

சென்னையில் இருந்து வேலைசெய்யும் ஒரு தம்பிக்குக் கடந்தவாரம் வேலையில் கடைசி நாள். அதனால் மரியாதைக்காக பேசுவோம் என்று
அழைத்திருந்தேன்.

பேச்சுனுடே,  'திடீரென வேலைய விட்டு போறீங்க, என்ன விசயம் ?' என்று விசாரித்தால் புலம்பித்தள்ளிவிட்டார்.

அவருக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை.  வீட்டில்தான் பெண் பார்த்திருக்கிறார்கள்.  ஜாதகத்தைக் கேட்டுப் பொருத்தம் பார்த்த பெண் வீட்டார்.  'ஜாதகம் எல்லாம் பொருந்தி வருது.  ஆனால், அவரோட எக்ஸ்பீரியசுக்கு சம்பளம் குறைவா இருக்குனு பொண்ணு நினைக்கிறா.  வேற வேலை தேடிக்கிட்டால், மேல பேசலாம்' எனச் சொல்லி இருக்கிறார்கள்.

அந்தப் பெண்ணுக்கும் மென்பொருள் துறையில்தான் வேலையாம்.
தம்பிக்கும் பெண்ணைப் பிடித்திருந்ததால், அவர்கள் சொன்னபடியே ஒரே மாதத்தில் அலைந்துத் திரிந்து சென்னையிலேயே வேறு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறார். இப்போது பெண் வீட்டை அனுகினால், பெண் இப்போது கல்யாணம் வேண்டாம் என்கிறாள் எனத் தட்டிக் கழித்துவிட்டார்களாம்.

'சும்மா இருந்த என்னை வேலை மாறவைச்சு இம்சை பண்ணிட்டாங்க ஜீ ' என்றார்.

'அது என்ன ஜீ ?' என்றேன்

'எல்லாரும் சொல்லாங்க. அதனால சொல்லிச் சொல்லி பழகிட்டுங்க'.

கொஞ்சம் கண்டிப்பாக 'அதெல்லாம் தமிழ்ல வழக்கம் இல்ல. சொல்லாதீங்க' 

'அது தமிழ் இல்லைங்களா ?.....' என இழுத்தவர், 'அப்ப சரிங்க இனிமே சொல்லல..' என்றார்.

பெண் வீட்டுக்காகப் புது வேலையைத் தேடிக் கொண்டவர். நாம் சொல்வதால் ஜீ போடுவதையும் நிறுத்திக் கொள்வார் என நம்புவோம்.

#அதுஎன்னஜீ

3 comments:

  1. ***எக்ஸ்பீரியசுக்கு சம்பளம் குறைவா இருக்குனு பொண்ணு நினைக்கிறா.***

    இதுக்கு அப்புறாமும் உங்க "ஜீ" க்கு புரியலையா, பொண்ணூக்கு இவர் மேல் அப்படியொன்னும் இன்டரெஸ்ட் இல்லைனு?

    தமிழ்நாட்டில் சித்தாள் வேலை பார்க்கிறவன், சர்வர் எல்லாரும் பிகார் போன்ற மாநிலத்தில் இருந்து வர்ராங்களாம். தோட்டினு சொல்லுவாங்க இல்லை/ இங்கே உள்ள தமிழர்களீன் டாய்லட் க்ளீன் பண்ணூரவன். அவன் எல்லாம் ஆந்திராவிலிருந்து வந்து தமிழனுக்கு வேலை செய்றான்.

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு பீத்துறவன் எல்லாம் இதுபோல் பல மாநித்தவனை abuse பண்ணீக்கொண்டுதான் இருக்கான். டாய்லட் அள்ள சீமானும், பாரதிராஜவும் முதலில் ஆரம்பிக்கணூம். Tamils abuse lots and lots of people who are from other states too. It is untrue that Tamils only let others rule them.

    ReplyDelete
    Replies
    1. //பொண்ணூக்கு இவர் மேல் அப்படியொன்னும் இன்டரெஸ்ட் இல்லைனு? //- ம், புரிஞ்சுகிட்டு ஒதுங்கறதுதான் மரியாதை.

      Delete
  2. Manager endra muraiyil kooriyadai, pothuveliyil pottu viteerkale????

    ReplyDelete