அட்லாண்டா ஜெயா மாறன்-இன் எனது வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசிப்பனுபவம் (முகநூலில் பகிர்ந்தது) ... நன்றி ஜெயா !
//
வனநாயகன் - ஓர் அறிமுகம்:
மனதுக்கு நெருக்கமான மலேசியாவைக் கதைக்களமாக வைத்து புதினம் எழுதும் கனவின் நனவு தான் 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' என்கிறார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்.
கோலாலம்பூரில் IT துறையில் வேலை செய்யும் திறமையான, நேர்மையான 28 வயது வாலிபன் சுதாங்கன். அவர் வேலை செய்யும் bank merger project வெற்றிகரமாக live சென்றவுடன், காரணமே சொல்லப்படாமல் fire செய்யப்படுகிறார். விரக்தி ஒரு புறம் குடும்பபாரம் ஒரு புறம் அழுத்த வேறு வேலை தேடுகிறார். மலேசியாவில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் இருந்து சம்பாதித்தாக வேண்டிய நிலை. ஆனால், அவருடைய முயற்சிகள் தடுக்கப்படுகின்றன.தன்னை வேலையைவிட்டுத் தூக்கியதற்கும், தான் மலேசியாவில் இருக்கவே கூடாது என்று தடுக்கப்படுவதற்கும் என்ன காரணம்? தான் அறியாமல் தன்னை சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருப்பது ஏன்? என்ற குழம்புகிறார்.
சரி. இந்தியாவிற்குச் சென்று அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அதன் பினனணியில் இருக்கும் அரசியலுக்கும் விடை தேடுகிறார். உள்ளே செல்லச் செல்ல அந்த ஆபத்தின் ஆழம் தெரிகிறது.
அதில் அவர் ஜெயித்தாரா? அதில் என்னென்ன ஆபத்துகள் இருந்தன? ...
விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் கதையை கொண்டு செல்கிறார் எழுத்தாளர் .
“சார், இப்ப முன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம் கிடையாது. திறமையில்லா திண்டாட்டம்தான்”
"அறையினுள்ளே முகம் சுழிக்க வைத்த சிகரெட் புகை நேரடியாகப் புற்று நோய் மருத்துவமனைக்கு வழி காட்டுவதாய் இருந்தது"
"நீங்களெல்லாம் போலீசா? என்று கேட்ட போது, நான் ஆமாம் என்று பொய் சொன்னேன். அப்போதும் புத்தர் ஆழ்ந்த அமைதியில் கண் மூடித்தான் இருந்தார்" - என நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் நடை நயமாய்க் கூட வரும்.
மலேசியக் காடுகளில் திரியும் செந்நிற வாலில்லா மனிதக் குரங்குகளைப் (ஓராங் ஊத்தான்) போல கோலாலம்பூரின் கான்கிரீட் காடுகளில் திரியும் வன நாயகனின் கதை இது!
வனநாயகன் (ஓராங் ஊத்தான்) - படிக்க வேண்டிய புதினம்!
அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1
No comments:
Post a Comment