புத்தகத்தை வாங்க
Monday, February 20, 2023
வனநாயகன் குறித்து-26 (..So interesting !!)
Tuesday, April 19, 2022
வனநாயகன் குறித்து-22 (தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன)
அமெரிக்காவில் வசிக்கும் கனிமொழி (Kanimozhi MV) வனநாயகன்- மலேசிய நாட்கள் குறித்து எழுதிய முகநூல் குறிப்பு (2017)
"தோழர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் வனநாயகன் நெடுங்கதைப் படித்தேன்...
பெரும்பாலும் நெடுங்கதைகள் படிக்கும் பழக்கம் இல்லை, கடைசியாக படித்த நெடுங்கதை நினைவில் கூட இல்லை... அதனால் சற்றுத் தயங்கியபடியே தான் படிக்க ஆராம்பித்தேன். ஒரு 25 பக்கங்கள் பொறுமையாக திருப்பிக்கொண்டு வந்தேன், பின் போக போக கதை விறுவிறுப்புடன் சென்றது, மலேசிய கதைக்களம், நாம் மலேசியாவில் இருப்பதுபோன்று காட்சிகள் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது.
கதையின் நடுவே ஏராளமான செய்திகள், மலேசியாவின் ஊர்ப்பெயர்கள் பற்றி அங்கே வாழ்க்கை முறை பற்றி தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
ஒரே ஒரு வருத்தம் அந்த முக்கிய கதை நாயகனை சைவமாக வைத்திருக்க வேண்டாம் 😄😄
ஒரு நெடுங்கதைக்கு முக்கியத் தேவை படிப்போரை இறுதிவரை கதையை முடித்துவிட வேண்டும் என்ற உந்து சக்தியை தக்க வைப்பது.. அதை தோழர் சிறப்பாக செய்திருக்கின்றார்
வாழ்த்துகள் தோழர் !! "
புத்தகங்களை வாங்க
https://dialforbooks.in/product/9788184936773_/
Wednesday, April 6, 2022
வனநாயகன் குறித்து-21 (இரட்டைக் குழல் துப்பாக்கிகள்)
வனநாயகன் குறித்து தனது கருத்துக்களைத் தனி மடலில் பகிர்ந்த அகிலா-வுக்கு நன்றி !
//சார்,
சமீபத்தில் நான் நக்கீரனின் காடோடி படித்தேன். கிழக்கு மலேசியாவில் நடந்த (நடந்து கொண்டிருக்கிற) காட்டழிப்பில் பங்கேற்ற அல்லது உதவியாக இருந்த ஒருவருடைய மனநிலையைப் பற்றி பேசும் நாவல்
இந்தப் படைப்பின் வழியாக ஆசிரியர் தொல்குடியினரின் வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும், விலங்குகளையும் குறித்து பதிவுசெய்திருக்கிறார். அது குறித்தான தகவல்களை மேலும் அறிய உரிய ஆங்கில சொற்களும் தரப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
மலேசிய பின்புலத்தில் நீங்கள் எழுதிய வனநாயகன் (மலேசிய நாட்கள்)-னும் இந்தக் காடோடி-யும் சம காலத்தில் மலேசிய நிலப்பரப்பு குறித்தும், சூழல் குறித்தும் எழுதப்பட்ட அழுத்தமான படைப்புகள் என நினைக்கிறேன். இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல.. வாழ்த்துகள் !
//
Monday, November 22, 2021
வனநாயகன் குறித்து-20 (இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நினைவுக்கு வருகிறது)
அமெரிக்க வாசக நண்பர் திலகா எனது "வனநாயகன்-மலேசிய நாட்கள்" நாவல் வாசிப்பனுபவம் குறித்துப் பகிர்ந்தது ... நன்றி திலகா!
//
வனநாயகன் (மலேசிய நாட்கள்) முதல் வாசிப்பு (பருந்து பார்வை) முடித்தேன். இன்னமும் ஆழமாக இரண்டாவது முறை படித்துப் பார்க்க வேண்டும்.
//
இணையத்தில் வாங்க இணைப்பு கீழே;
https://dialforbooks.in/product/9788184936773_/
Friday, July 23, 2021
வனநாயகன் குறித்து-19 ( படிக்க வேண்டிய புதினம்! )
அட்லாண்டா ஜெயா மாறன்-இன் எனது வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசிப்பனுபவம் (முகநூலில் பகிர்ந்தது) ... நன்றி ஜெயா !
//
வனநாயகன் - ஓர் அறிமுகம்:
மனதுக்கு நெருக்கமான மலேசியாவைக் கதைக்களமாக வைத்து புதினம் எழுதும் கனவின் நனவு தான் 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' என்கிறார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்.
கோலாலம்பூரில் IT துறையில் வேலை செய்யும் திறமையான, நேர்மையான 28 வயது வாலிபன் சுதாங்கன். அவர் வேலை செய்யும் bank merger project வெற்றிகரமாக live சென்றவுடன், காரணமே சொல்லப்படாமல் fire செய்யப்படுகிறார். விரக்தி ஒரு புறம் குடும்பபாரம் ஒரு புறம் அழுத்த வேறு வேலை தேடுகிறார். மலேசியாவில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் இருந்து சம்பாதித்தாக வேண்டிய நிலை. ஆனால், அவருடைய முயற்சிகள் தடுக்கப்படுகின்றன.தன்னை வேலையைவிட்டுத் தூக்கியதற்கும், தான் மலேசியாவில் இருக்கவே கூடாது என்று தடுக்கப்படுவதற்கும் என்ன காரணம்? தான் அறியாமல் தன்னை சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருப்பது ஏன்? என்ற குழம்புகிறார்.
சரி. இந்தியாவிற்குச் சென்று அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அதன் பினனணியில் இருக்கும் அரசியலுக்கும் விடை தேடுகிறார். உள்ளே செல்லச் செல்ல அந்த ஆபத்தின் ஆழம் தெரிகிறது.
அதில் அவர் ஜெயித்தாரா? அதில் என்னென்ன ஆபத்துகள் இருந்தன? ...
விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் கதையை கொண்டு செல்கிறார் எழுத்தாளர் .
“சார், இப்ப முன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம் கிடையாது. திறமையில்லா திண்டாட்டம்தான்”
"அறையினுள்ளே முகம் சுழிக்க வைத்த சிகரெட் புகை நேரடியாகப் புற்று நோய் மருத்துவமனைக்கு வழி காட்டுவதாய் இருந்தது"
"நீங்களெல்லாம் போலீசா? என்று கேட்ட போது, நான் ஆமாம் என்று பொய் சொன்னேன். அப்போதும் புத்தர் ஆழ்ந்த அமைதியில் கண் மூடித்தான் இருந்தார்" - என நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் நடை நயமாய்க் கூட வரும்.
மலேசியக் காடுகளில் திரியும் செந்நிற வாலில்லா மனிதக் குரங்குகளைப் (ஓராங் ஊத்தான்) போல கோலாலம்பூரின் கான்கிரீட் காடுகளில் திரியும் வன நாயகனின் கதை இது!
வனநாயகன் (ஓராங் ஊத்தான்) - படிக்க வேண்டிய புதினம்!
அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1
Monday, November 2, 2020
வனநாயகன் குறித்து-18 ( ஆர்வத்தைத் தூண்டுகிறது )
"வனநாயகன்: மலேசிய நாட்கள்" குறித்து எனது மதிப்பிற்குரிய தமிழ்
ஆசிரியர் ஒருவர் அனுப்பிய வாழ்த்துகளை இங்கே நண்பர்களுடன் பகிர்கிறேன்.
//
வனநாயகன் புதினம் ஒரேமூச்சில் படித்தேன்.
வனநாயகன் வெளியாகி சுமார் 4 ஆண்டுகள் (December 1, 2016) கடந்தும் படைப்பு தொடர்ந்து வாசிக்கப்பட்டு பேசப்படுவது மகிழ்ச்சியோடு உற்சாகத்தையும் தருகிறது.
Monday, October 5, 2020
வனநாயகன் குறித்து-17 (சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று)
"வனநாயகன்" சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று என Good Reads தளத்தில் வாசகர் மணிகண்டன்(Mo Manikandan) சொல்லியிருக்கிறார். கூடவே ஆங்கிலத்தில் மதிப்புரையோடு, Must read! எனக் குறிப்பிட்டு 5 நட்சத்திர மதிப்பீடும் செய்திருக்கிறார். நண்பருக்கு நன்றி சொல்லுவோம்.
//
Very interesting novel that talks about different aspects of "onsite job" or "foreign job" of technical professionals. The author touches Malaysia's geography, linguistics, culture, politics and Malaysian Tamil peoples life along with the story without boring. The corporate politics, office politics, journalism, environmental aspects all are talked through dialogues. The mystery of twists are kept until the end. Must read novel. New generation Tamil novels are fresh, exciting and more relevant to our modern IT lifestyle. Amazon kindle is a brilliant platform for such attempts. Bravo
Lately i wanted to mention that, This is a contemporary immigration fiction! Genre which is not so many in tamil. The one I remember is pa.singaram's "puyalile oru thoni" & "kadaluku appaal" (historical immigration fiction though). Must read!//
Sunday, August 30, 2020
வனநாயகன் குறித்து-16 (கார்ப்ரேட்டின் மற்றொரு முகம்)
அந்த 1000-க்கு 1 எனும் கணக்கெல்லாம் எந்த அளவு சாத்தியமோ தெரியவில்லை. ஆனால், கருத்துகளைப் பகிர்வதில் கண்டிப்பாக வாசகர்களைக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. கொரோனா காலத்திலும் தொடர்ச்சியாகப் பல வாசகர் கடிதங்கள், மதிப்புரைகள் எழுதியிருக்கிறார்கள்.
நேற்று "வனநாயகன்-மலேசிய நாட்கள்" குறித்து goodreads தளத்தில் பிரியதரிசினி எழுதிய ஒரு மதிப்புரை கூட கண்ணில் பட்டது...
எப்பொழுதுமே மனிதன் தன்னை மற்றொன்றுடன் பொருத்தி பார்த்து தான் தன் சூழலின் ஆழத்தை உணருகிறான். நாவலில் சுதாவும் தான் வேலை செய்யும் நாடான

சுதாவின் வழியே மலேஷியாவின் முக்கிய இடங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும். மனிதர்களின் குணங்களும் என்று புதிய சூழலை கண் முன் கொண்டு வருகிறது. கதையின் மென்நகர்வு அதற்கு ஏற்ப அமைந்ததால் இயல்பான சம்பவங்களாக நடந்தேறுகிறது.
தற்பொழுது இந்த நாவலை படிக்கும் போது ஒரு தலைமுறை இடைவெளியை
துல்லியமாக உணரமுடிகிறது. கடந்தக் காலத்தை திரும்பி பார்க்கும் நிகழ்வாகவே முற்றிலும் அமைந்தது எதிர்பாராமல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அதுவும் யாஹூ சாட் பற்றி எல்லாம் படிக்கும் போது ஞாபகங்களைத் தட்டி எழுப்பிவிடுகிறது.
ஒரு வருடம் மலேஷியாவில் இருந்த சுதாவிற்கு முடியும் காலம் கசப்பாகவே அமைந்தாலும் பல மனிதர்களுடனான தொடர்பு வாழ்ந்த காலத்தின் எச்சமாகவே மனதில் நின்றுவிடுகிறது. காதல் என்று நினைப்பது காதலல்ல அது உணரும் போது எதிரில் இருப்பது தான் காதல் என்று பத்மாவின் மூலம் அமைந்த நகர்வு எதார்த்தம்.
நாம் அனைவருமே எதார்த்தவாதிகள் தான் ஆனால் நாவல் வாசிக்கும் போது நம்மையும் மீறி ஒரு ஹீரோயிசத்தை எதிர்பார்க்கும் மனதை அடக்கத் தெரியாதவர்களும் என்பது உண்மை. சுதாவிற்கு ஏற்பட்ட மறைமுகத் துரோகத்திற்கு அவன் எதாவது அதிரடி செய்வானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே கடைசிவரை வந்ததும் நம் மனம் தான்.
வாடிக்கையாளர்களின் தரவுகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் தேவைப்படுபவர்களுக்கு. இதில் சம்பத் என்ற கதாபாத்திரம் கார்ப்ரேட்டின் ஒரு முகம். அது இல்லாத இடம் இல்லை. தன்னை உயர்த்த கீழே இருப்பதின் மேல் கால் மட்டும் தான் வைக்க வேண்டும் மனதை வைத்தால் முதல் பலி அவனாகத்தான் போவான்.
சாரா மாதிரி பத்திரிக்கையாளர்களின் பிரசன்னமே நியாயத்தின் வாழ்விற்காக எதிர்பார்த்திற்கும் மக்களுக்கு ஒரு பலத்தை அளிக்கிறது.
பலிகளைக் கொண்டு தான் கார்ப்ரேட் வளர்கிறது. உண்மைகள் வெளிவந்த பிறகு அதற்கான அழிவு என்று சொல்வது முடிவல்ல மற்றொரு தொடக்கத்தின் புள்ளி அது.
..
கிழக்கு பதிப்பக வெளியீடான வனநாயகன் புத்தகமாகவும், கிண்டிலிலும் கிடைக்கிறது. இணைப்பு விவரங்கள்.
https://dialforbooks.in/product/9788184936773_/
https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-VanaNayagan-Malaysia-Naatkal-ebook/dp/B06X9VTR71
Saturday, March 14, 2020
வனநாயகன் குறித்து-15 (வரவேற்கத்தக்க ஒரு படைப்பு)

வித்தியாசமான கதை பொருளில் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். வாசிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது. துறை சார்ந்த அனுபவங்கள்
, மலேசிய வாழ்க்கைச் சூழலின் பதிவுகள்.. இந்தியாவில் இருந்து மலேசியா செல்லும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.. அனுபவங்கள்.. என கதையை மிகச் சிறப்பாக அமைத்து இருக்கிறார் நூல் ஆசிரியர். இதுவரை பயணத்தில் நாவலின் பாதி பகுதியை முடித்து விட்டேன். மேலும் தொடர வேண்டும் சென்னை வந்தடையும் வரை..

நாவலாசிரியர்: ஆரூர் பாஸ்கர்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

-சுபா
Monday, July 8, 2019
ராஜ தேநீர் வந்திருக்கிறது
வனநாயகன் விற்பனைக்கான ராயல்டி தொகை வந்திருக்கிறது. தொகையை பதிப்பகத்தின் சார்பில் சிறகுகள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிட்டார்கள். வழக்கம் போல் அது அறக்கட்டளை வாயிலாகக் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். ராயல்டியாக வந்த தொகை லட்சங்களில் இல்லாவிட்டாலும் அது நமது எழுத்திற்கான அங்கீகாரம். உழைப்புக்கான மரியாதை. தமிழின் மூலமாக வரும் தொகை முழுமையும் அறக்கட்டளையில் சேர்த்துவிடுகிறேன். அது தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது படிப்பை மட்டுமே நம்பி இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு நம்மால் முடிந்த சிறு உதவி. அது படித்தால் முன்னுக்கு வரலாம் கஷ்டங்கள் தீரும் பெரிய சாதனைகள் செய்யலாம் என்பதை உறுதிசெய்யும் நம்பிக்கை விதை என்பதைத் தவிர வேறில்லை.
இன்று நினைத்தாலும் கனவுபோல இருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன் எழுத்துலகில் எந்தவிதமான நட்புகளுமின்றி பெரிய பின்புலமில்லாமல் தனியாக உள்ளே நுழைந்து முதன் முதலாகக் கையில் இருந்த கவிதைகளைப் புத்தகமாக வெளியிட்டது (என் ஜன்னல் வழிப் பார்வையில், முன்னேர்) . பின்னர் பங்களா கொட்டா (அகநாழிகை), வனநாயகன் --மலேசியநாட்கள்(கிழக்கு), அந்த ஆறு நாட்கள் என வரிசையாக எழுதிய நாவல்களை வெளியிட பதிப்பகங்கள் கிடைத்தது மகிழ்ச்சி . முக்கியமாக அவை நண்பர்களுடைய வரவேற்பைப் பெற்றது மேலும் உற்சாகமளித்து இயங்கச் செய்கிறது.
இதைச் சாத்தியப்படுத்திய வாசக நண்பர்களுக்கும் உறுதுணையாக இருந்த பதிப்பகத்தினருக்கும் நெஞ்சம் நிரம்பிய நன்றிகள், என்றும்.
**************
Tuesday, July 2, 2019
வனநாயகன் குறித்து-13 ( வனநாயகன் - கனநாயகன்)
"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" சிங்கப்பூர் வாசகர் கங்கா பாஸ்கரன்(Ganga Baskaran) அவர்கள் முகநூலில் குறித்து எழுதிய கதை விமர்சனம். நன்றி கங்கா பாஸ்கரன்!!
/////

இந்த நாவலைப் படிக்கும் அனைவரும் நாவலைத் தாண்டி பல புதிய தகவல்களையும் நிச்சயம் அறிந்துகொள்வர். வழக்கமான நாவல்களில் இருந்து வேறுபட்ட தளத்தைக் கண்முன் கொண்டு வரும் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் மனதுக்கு நெருக்கமான மலேசியாவின் மற்றொரு கோணத்தை நம்மிடம் எழுத்தின்வழிக் காட்டுகிறார்.
நிரந்தர வேலை இல்லையென்றால் காதலி தோழியாவாள்; அன்பு அதிகமிருந்தால் தோழியும் காதலி ஆவாள் எனக் கதையோட்டத்தோடு உண்மை அன்பையும் வாசகர்களுக்கு உணர்த்துகிறார். நட்பிற்காக இறுதி வரை துணை நிற்கும் சிங், சாரா, நண்பனாக இருந்தாலும் துரோகியாகும் உடன் பணிபுரிபவர்கள் எனப் பல கதாபாத்திரங்களையும் கச்சிதமாகப் பொருத்தி நாவலைச் சிறப்பாக நகர்த்திச் செல்கிறார்.
வனநாயகன் - கனநாயகன்.
/////
Sunday, June 9, 2019
அட்லாண்டாவில் வனநாயகன்
அட்லாண்டா நகரின் ஃபோர்சைத் மாகாண (Forsyth County) நூலகத்தில் எனது "வனநாயகன்: மலேசிய நாட்கள்" (புதினம்) அச்சுப்பதிப்பாக கிடைப்பதாக நண்பன் ஒருவர் ஆச்சர்யப்பட்டிருந்தார்.
அட்லாண்டாவின் புறநகரான கம்மிங்(Cumming)ல் வசிக்கும் அவர் நூலகம் போனபோது வனநாயகன் தமிழ் புனைவு வரிசையில் தற்செயலாகக் கண்ணில் பட்டது என படமும் எடுத்து அனுப்பியிருந்தார். அட்லாண்டா வாழ் நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Sunday, May 26, 2019
வனநாயகன் குறித்து-14 (தமிழ் நாவல் உலகில் குறிப்பிடத்தக்க வரவு)
அவர்கள் முகநூலில் எழுதிய வாசக அனுபவம். நன்றி Elango Pattabiraman!!
/////
திரு. ஆரூர் பாஸ்கர் அவர்கள் எழுதிய புதிய நாவல் " வன நாயகன் " பற்றி இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்!
Tuesday, April 9, 2019
வனநாயகன் குறித்து-11 (புதினத்தின் பெயரே வசீகரம்..! )
முகநூலில் "வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து எழுதிய கதை விமர்சனம்.
நன்றி ரமணி பிரசாத் !!
/////

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1
Monday, April 1, 2019
வனநாயகன் குறித்து-12 (வனநாயகன் உங்கள் உண்மை சம்பவமா?)
அருமையாக இருந்தது என சிலாகித்தார்.
வாசகன் ஒரு படைப்பை வாசிக்கும் போதும் வாசித்த பின்பும் ஏதோ ஒரு புள்ளியிலேனும் தன்னை படைப்பில் அடையாளம் காணும் போது அந்தப் படைப்பு வெற்றி பெற்றதாக சொல்வார்கள். அந்த வகையில் வனநாயகன் வாசகர்களின் நெஞ்சைக் கவர்ந்த வெற்றிப் படைப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து உற்சாகமளித்து ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !!
Friday, March 15, 2019
வனநாயகன் குறித்து-10
ஹரி குட்ரீட்ஸ் (good reads) தளத்தில் பகிர்ந்த குறுந்தகவல்.
இதுபோல வனநாயகன் குறித்து எழுதப்படும் பல குறிப்புகள் பொதுவாக தமிழ் வாசகர்கள் மெளனமானவர்கள் என்பதைப் பொய்யாக்குகிறது.
நன்றி ஹரி !!
/////

1. It company 2. வெளிநாட்டில் வாழும் இந்தியன்.
எனது ஆரம்பகல Singapore அனுபவத்தை மற்றும் kl/genting வருடி சென்றது.
ஒரு நல்ல திர்ல்லராகத் தொடங்கி சற்று சதாரணமாக முடிந்தது.
/////
Sunday, January 6, 2019
வனநாயகன் குறித்து-9 (ஐடி துறை பற்றிய நாவல் என்றாலே கள்ளக் காதலா ?)
படைப்பாளனுக்கு மகிழ்ச்சியும் ஊக்கத்தையும் தரக்கூடியது.
அந்த இரண்டையும் பெங்களூரைச் சேர்ந்த வாசகர் ரெங்கசுப்ரமணி எனக்குத் தந்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றிகள் !!
அவருடைய தளத்தில் இருந்து..
//பல நாட்களாக படிக்க நினைத்துக் கொண்டிருந்த புத்தகம், ஐடி துறை பற்றியது என்பதாலேயே பயந்து கொண்டிருந்தேன். காரணம், ஐடி துறை பற்றிய நாவல் என்றாலே கள்ளக் காதல் நாவல் என்று நினைத்துக் கொள்கின்றனர். வெளியாட்கள் எழுதினாலும் பரவாயில்லை, அந்த துறையில் இருப்பவர்கள் கூட அதைத்தான் எழுதுகின்றார்கள். ஒரு வேளை அவர்களின் அனுபவம் அது மட்டும் தானோ என்ன எழவோ. கிண்டில் அன்லிமிட்டடில் கிடைப்பதால் துணிந்து படித்தேன். தகவல் தொழில் நுட்பத்துறையை மையமாக கொண்ட ஒரு நாவல்.
தகவல் தொழில்நுட்பத்துறையை பற்றி மாயைகள் அதிகம். அதிக பணம், அதிக உழைப்பில்லாத வேலை, வேலைக்கு அதிகமான சம்பளம், நிரந்தரமற்ற வேலை, உழைப்பை உறுஞ்சுவார்கள், கொத்தடிமைகள், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் என்று ஒன்றுக்கொன்று முரண்பாடான பல பார்வைகள். தேவைக்கேற்ப கோணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஐடியில் வேலை செய்பவர்களுக்கே கொஞ்சம் இந்த மாயை உண்டு. கார்ப்பரேட் அடிமைகள், கூலிகள் என்று தங்கள் தலையில் செருப்பால் அடித்துக் கொள்வார்கள். இந்த பார்வை அத்துறையை பற்றி எழுதுபவர்களிடமும் வந்து சேரும். நல்ல வேளை இந்நாவலில் அது இல்லை. முக்கியமாக அடுத்தவன் மனைவியை தள்ளிக் கொண்டுபோகும் இளைஞர்கள் இல்லை. அதற்காகவே பாராட்ட வேண்டும்.
மெலிதான் த்ரில்லர் ஸ்டைலில் எழுதப்பட்ட கதை, மலேசியாவில் நடைபெறுகின்றது. டெஸ்மா சட்ட காலத்து கதை.ஐடி என்பது தன்னந்தனியாக இயங்கக்கூடிய துறையல்ல. அது பெரும்பாலும் வேறு ஒரு துறையை சார்ந்தே வேலைசெய்ய வேண்டும். வங்கிகள், மருத்துவதுறை, பங்குச்சந்தை, வணிகம், ஆராய்ச்சி என்று, மற்ற வேலைகளை சுலபமாக்க கஷ்டப்படுவதுதான் ஐடி துறை. வங்கி இணைப்பு சம்பந்தப்பட்ட பணியிலிருக்கும் ஒருவனுக்கு ஒரு தொலைபேசி வருகின்றது. அது அவனின் வேலை நீக்கத்திற்கு காரணமாகின்றது. காரணத்தை தேடிச்செல்லும் அவன் தெரிந்து கொள்வது மற்றுமொரு உலகை. தகவல் தொழில்நுட்ப உலகில் இருட்டான பக்கங்களை கொஞ்சம் காட்டுகின்றது. ஊழல், லஞ்சம் போன்றவை எல்லாம் இத்துறையில் இல்லை என்ற மாயை உடைக்கப்படுகின்றது. ஒரு ப்ராஜெக்டை பெறுவதில் நடக்கும் தில்லுமுல்லுகள் பலருக்கு தெரிவதில்லை, அதே நிறுவனத்தில் இருப்பவனுக்கே தெரிந்திருப்பதில்லை. அவற்றையெல்லாம் தொட்டு காட்டுகின்றது. த்ரில்லர் என்பதால், நாயகன் சாகசங்கள் எல்லாம் செய்வதில்லை, ஒரு சாதரணன் என்ன செய்ய முடியுமோ அவ்வளவுதான், என்ன, கதாசிரியரின் உரிமையால் அவனுக்கு உதவி செய்ய பலர் தோன்றுகின்றனர், காவல்துறை சரியான நேரத்திற்கு வருகின்றது, குறுக்கே பாய பலர் தயாராக இருக்கின்றனர். நாயகன் கதை ஆரம்பிக்கும்போதே நிறுவனத்திலிருந்து விரட்டப்படுவதால், அதன்பின் சம்பவங்கள் முன்னும் பின்னும் சென்று வருகின்றது.
குறிப்பிடத்தக்க அடுத்த அம்சம், கதை நடக்கும் இடம். மலேஷியா. மலேஷியாவை படிப்பவர்களுக்கு காட்ட நினைத்து ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளார். மலேஷியாவின் முக்கிய இடங்கள், அவர்களின் கலாச்சாரம், அங்கு நிலவும் இனப் பிரச்சினைகள், உணவு பழக்க வழக்கங்கள் என்று பல நுணுக்கமான விஷயங்களை காட்டியிருக்கின்றார். மலேஷியாவில் நடைபெறும் காடு அழிப்பு, சுற்றுசூழல் பிரச்சினைகள், அரசியல்வாதிகளின் செயல், கேங் வார்கள், சீனர்களின் ஆதிக்கம் என்று பல விஷயங்கள் இணைப்பாக வருகின்றது. .......
//
முழுமையான பதிவு அவருடைய இணையதளத்தில் http://rengasubramani.blogspot.com/2018/10/blog-post_30.html
''வனநாயகன்- மலேசிய நாட்கள்'' புதினம் சென்னை புத்தகக் கண்காட்சி- கிழக்கு பதிப்பகத்தில் இந்த ஆண்டும் கிடைக்கிறது. அரங்கு எண்கள் - 365,366,453,454
இணையத்தில் வாங்க.
https://www.nhm.in/shop/9788184936773.html
அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1
Friday, June 1, 2018
போர்னியோ தீவின் குரங்குகள்
வளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை விளக்கும் ஒரு ஒப்பீட்டுப் படத்தை மலேசிய நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். போர்னியோ பற்றிய தெரியாதவர்களுக்காக..
போர்னியோ- வஞ்சனையில்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் தீவு.
முழுமையும் பசுமையான மழைக்காடுகள். மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்தத் தீவை இந்தோனேசியா, மலேசியா, புரூணை போன்ற மூன்று நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. இது உலகின் மூன்றாவது பெரிய தீவும் கூட (முதல், இரண்டாம் இடத்தில் முறையே கிரீன்லாந்து, புதிய கினியாவும் இருக்கின்றன)

துரதிஷ்டவசமாக மற்ற கிழக்காசிய நாடுகளைப் போலவே மலேசியாவும், இந்தோனேசியாவும் போட்டி போட்டு பல்லாண்டுகளாக இத்தீவின் இயற்கை வளங்
களைச் சூரையாடி வருகின்றன. அதனால், தங்கள் வாழ்வாதரத்தை இழந்த பல லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள் செத்து மடிந்துகொண்டிருக்கின்றன.
எனது வனநாயகன் நாவல் பேசும் அரசியலும் அதுதான். புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருப்பதுகூட இந்த "ஒராங்குட்டான்" குரங்கு தான்.
தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டு, வேட்டையாடப்படும் இந்தக் குரங்குகள் படும்பாட்டை கதையோட்டத்தோடு சொல்லி இருப்பேன். சர்வதேச அளவில் அழிந்து வரும் அரியவகை விலங்காக இவை அறிவிக்கப்பட்டிருந்தாலும் மனித அட்டூழியங்கள் தொடரத்தான் செய்கின்றன. அதன் உச்சமாக இந்தக் குரங்குகள் இந்தோனேசியா போன்ற நாடுகளில் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறன போன்ற அதிர்ச்சிகர தகவல்களும் அதில் உண்டு.
***
"வனநாயகன்-மலேசிய நாட்கள்" வாங்க
அமெசான் கிண்டில் வடிவில் வாங்க
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1
வனநாயகன் இப்போது கூகுள் புக்ஸிலும் கிடைக்கிறது
https://books.google.com/books?id=QqfVCwAAQBAJ&printsec=frontcover&dq=%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjOr_emlbLbAhXP21MKHV9WCLUQ6AEIKTAA
Saturday, April 14, 2018
வனநாயகன் குறித்து-8
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
*********************************
hi
vijayalakshmi.
*********************************
எனது படைப்புகளைத் தொடரந்து வாசித்து, கருத்துகளைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தும் வாசகநண்பர்களுக்கு நெஞ்சம் நிரம்பிய நன்றிகள் !!
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள் 304, விலை ரூ.275
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1