சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக 2026-ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஜுன் 19-ஆம் தேதி நடந்து முடிந்தது.
அனைவரும் விரும்பும் 100 சதம் தேர்ச்சி எனும் இலக்கை மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எட்டவில்லை என்றாலும், பள்ளி நிர்வாகம் துடிப்போடு செயல்படுகிறது. அடுத்த ஆண்டு அந்த இலக்கை எட்டும் எனும் நோக்கத்தில் மாங்குடி பள்ளி தேர்தெடுக்கப்பட்டது.
அமெரிக்க குடியுரிமை பெற்று குடும்பத்தோடு டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் சீனிவாசன் சண்முகம் தனது குடும்பத்தோடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் உரையாற்றினார். திருவாரூர் அலிவலத்தை சொந்த ஊராக கொண்ட சீனிவாசனின் மனைவி பிரியா அவர்களுடைய உரை கிராமப்புற மாணவர்களை உற்சாகமூட்டி நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது சிறப்பு.
2012-ல் தொடங்கப்பட்ட சிறகுகள் அமைப்பின் வழியாக ஆண்டுதோறும் பரிசு எனும் நிகழ்ச்சி தொடங்கி 10-ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அந்த விதத்தில் 2026-இல் நடந்த இந்த நிகழ்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று.
விழா குறித்து அங்கு ஆசிரியாக உள்ள நண்பர் விமல், 'அறக்கட்டளையின் குடும்ப விழாவாக நடந்தேறியது மகிழ்ச்சி !!' என வாட்ஸ்-அப் செய்திருந்தார். கூடவே இந்த விழாவானது சீரும் சிறப்பாக நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த உங்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா என்றிருந்தார்.
உண்மையில், பெரிய வாய்ப்புகள் இல்லாத எளிய பின்புலத்தில் இருந்து வரும் மாணவ மாணவியர் கல்வியால் தங்கள் வாழ்வில் சீரும் சிறப்பும் பெறவேண்டும் என்பதே எனது பெரு வேட்கை. அதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்களுடைய தோளில் தட்டி உற்சாகப்படுத்தும் ஒரு சிறு முன்னெடுப்பே இது என பதில் எழுதினேன்.
பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கும், தேர்வில் வெற்றி பெற்று உயர்நிலைப்பள்ளி நுழையும் அனைவருக்கும் வாழ்த்துகள் !!.
சீர்-சிறப்பு என்றால் என்ன ? என்பர்களுக்காக- சீர் means prosperity, glory, or grace. சிறப்பு means excellence, distinction, or special honor.

No comments:
Post a Comment