ஓர் உறவின் இழையில் மௌனம் எப்போது சுவராக மாறுகிறது என்பதை மணிரத்னம் மிக நுட்பமாகக் காட்டிய படம் "மௌனராகம் (1986)". அந்த மௌனத்தின் கனத்தை மிக அழுத்தமாக உணர்த்தும் ஒரு காட்சி ஒன்று.
புதுமணத் தம்பதிகள் வக்கீலைப் பார்த்து விவாகரத்து சமர்பித்துவிட்டு காரில் வீடு திரும்புகிறார்கள். கார் டெல்லி சாலையில் பயணிக்கிறது.
இப்போது கேமராவின் தூர கோணத்தில் கார். பின்னணியில் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் குரலில் “ஆ..ஆ…மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ... “ வழிந்தோட, கார் வலது புறமோ இடது புறமோ இன்றி, சாலையை இரண்டாக பிரிக்கும் நீண்ட வெள்ளை கோட்டுக்கு நடுவே மெதுவாக பயணிக்கிறது.
அது காரின் உள்ளே இருவரும் மனதாலும் உடலாலும் பிரிந்திருப்பதைக் குறியீடாக சொல்வது போல அமைந்திருக்கிறது. இப்படிப் படத்தில் எத்தனையோ மனதைத்தொடும் காட்சிகள். மெளன ராகம் - மணிரத்னம், இளையராஜா, பி.சி. ஶ்ரீராம், கார்த்திக், மோகன், ரேவதி போன்றோர் இணைந்து செய்த அற்புதம்.
'மெளனராகம்'- என்றும் மனதில் வாழும் ராகம். தமிழர்கள் பெருமை கொள்ளத்தக்க ஒரு படைப்பு.

No comments:
Post a Comment