Showing posts with label #அறத்துக்குஅப்பால். Show all posts
Showing posts with label #அறத்துக்குஅப்பால். Show all posts

Sunday, September 11, 2022

அறத்துக்கு அப்பால் - நாகேஸ்வரி அண்ணாமலை

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் குறித்து அமெரிக்க எழுத்தாளர் நாகேஸ்வரி அண்ணாமலை ... 

//

திரு ஆரூர் பாஸ்கர்,

வணக்கம்.  தங்கள்  'அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்' நூலை இப்போதுதான் படிக்க முடிந்தது.  எளிமையான தமிழில் நீங்கள் கூற விரும்புவதை சிறப்பாகக் கூறியிருக்கிறீர்கள்.  சமூகத்திற்குத் தேவையான புத்தகம்.  எல்லோரும் படித்துப் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது என்னையே பேஸ் புக்கில் ஒருவர் ஏமாற்றப் பார்க்கிறார்கள். ...

//

என சமூக ஊடகங்கள் குறித்த தன்னுடைய தனிப்பட்ட ஒரு அனுபவத்தையும் இணைந்து பகிர்ந்த அவருக்கு எனது நன்றி !!

நூல் வாங்க இணைப்பு - To buy

Thursday, August 18, 2022

அறத்துக்கு அப்பால் - அர்லாண்டோ சேந்தன்

 "அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்" புத்தகம் குறித்து அர்லாண்டோ சேந்தனின் விரிவான வாசிப்பனுபவம் (ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது) ...

****
சில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனே உள்ளே இழுத்துக்கொள்ளும் அப்படியான எழுதும் கலையை கைவரப்பெற்றவர் எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர். அவரின் ஒரு வருட உழைப்பின் பலனாக, எழுதிய புத்தகம் தான் சமீபத்தில் வெளிவந்த இந்த அபுனைவு (Non-fiction) படைப்பு, ஆனால் ஆரம்பமே ஒரு த்ரில்லர் நாவலை வாசிக்க ஆரம்பிக்கிறோமா என்று நினைக்க வைக்கும் வேகம். மிக லாவகமாக வாசகனை புத்தகத்தோடு இறுக கட்டிவிடுகிறார். முதல் இரு அத்தியாயங்களை வாசித்த பிறகே முன்னுரை, அறிமுக உரையெல்லாம் வாசித்தேன்.
முதல் இரு அத்தியாங்கள் வெவ்வேறு பின்னனியில் சமூக ஊடகங்களில் நிகழும் குற்றச்சம்பவங்களை பற்றியது. அது எழுதப்பட்ட விதம் என் வாசிப்பு அனுபவத்தில் புதியது. முதல் சம்பவம் உச்சம் பெறும் இடத்தில் நிறுத்தி, அடுத்த சம்பவத்தை பற்றி ஆரம்பிக்கிறார். அடுத்த சம்பவத்தின் உச்சத்தில், முதல் சம்பவத்தின் தொடர்ச்சி வருகிறது. இந்த எழுத்துமுறை வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் சுவாரஸ்யம் குறையவில்லை.
நைஜீரிய தொழில்நுட்ப குற்றக் குழுக்கள் எப்படியெல்லாம் சமூக ஊடகங்களை வைத்து Social Engineering (சரியான நபர் போல் பேசி தகவல்களை திருடி ஏமாற்றவது) செய்து ஏமாற்றுகிறார்கள் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார். அடுத்த அத்தியாயமே பெண்கள் சமூக ஊடகங்களில் எவ்வாறான கெடுபிடிகளையும் அருவருப்புகளையும் சந்திக்கிறார்கள் என்பது பற்றியது.
சமூக ஊடகங்களின் வழியே வேலை வாங்கி தருகிறோம் என்று ஏமாற்றும் கும்பல்களை பற்றிய அத்தியாயம் தமிழக இளையர்கள் வாசிக்க வேண்டிய பதிவு. சமூக ஊடகங்கள் இவ்வளவு இழிவான செயல்களுக்கு தான் பயன்படுகிறதா எனும் அயர்ச்சி வரும் போது, அவரே அதை ஆக்க பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துபவர்களை பற்றிய தனித்தனி அத்தியாயங்களாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழக பெண்களின் சமூக ஊடக அனுபவங்களை அவர்களிடமே கேட்டு எழுதிய அத்தியாயங்கள் அருமை. பொதுவாக ஆண்களே பெண்களுக்கும் சேர்த்து கருத்து சொல்வதை தான் நாம் அதிகம் பார்த்திருப்போம் அதை கவனமாக தவிர்த்திருக்கிறார்.
சமூக ஊடக வெளியில் இருக்கும் பெண்களின் பதிவுகளில் தமிழ் இணைய சமூகம் எவ்வளவு பிற்போக்கானது என்பதும், சமூக ஊடகங்களில் பெண்கள் மீது எவ்வளவு வெறிக்கொண்டு தாக்குதல் நடைபெறுகிறதென்றும் தெரிகிறது, நாமும் இதை பலமுறை பார்த்து கடந்திருப்போம், அது வேறு ஒருவருக்கு நிகழ்கிறது அதனால் பெரிதாக கண்டுகொள்வதில்லை, அதன் தாக்கம் அந்த பெண்களின் வாழ்க்கையில் எப்படி இருக்கிறது என்று ஒரு முறை ஏனும் யோசித்திருப்போமா என்று நினைத்த போது, இல்லை என்று தான் சொல்வேன்.
ஒவ்வொரு அத்தியாத்தை முடித்தவுடன், அது போன்ற விஷயம் நமது சமூக ஊடக பயணத்திலும் நிகழ்ந்திருக்கிறதே என்று தோன்றும், அல்லது நமக்கு தெரிந்தவர்களுக்கு நடந்து இருக்கிறதே என்று தோன்றும். அதனால் இந்த புத்தகத்தை இன்னும் நெருக்கமாக நம்மால் வாசிக்க முடிகிறது.
நேற்று இரவு வாசிக்க ஆரம்பித்து அதிகாலை 2 மணி வரை வாசித்துவிட்டு இன்று மாலை மீண்டும் ஆரம்பித்து இப்போது தான் முடித்தேன் கிட்டதிட்ட நான்கு மணி நேர வாசிப்பு. தமிழில் சமூக ஊடகங்களை பற்றி இப்படி ஒரு புத்தகம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சமூக ஊடக வெளியில் உலவும் அனைவரும் வாசிக்க வேண்டிய
அருமையான
நூல்.
****
நூல் குறித்து விரிவாக எழுதி பகிர்ந்தமைக்கு நன்றி சேந்தன் !!

Saturday, February 26, 2022

அறத்துக்கு அப்பால் - முனைவர் மதிப்பிரியா

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல்... நூல் குறித்து முனைவர் மதிப்பிரியா முகநூலில் எழுதியது. நன்றி மதிப்பிரியா!.

//புத்தகம் என்னை ஒரு விருவிறுப்பான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை தூண்டியது . அமெரிக்காவில் வேலை வாய்ப்பு என்று பணத்தை இழந்தது ... "எவ்வளவு பெரிய ஆளுமைகள்... இவர்கள் கூட இப்படி இருப்பார்களா? " என்று நீங்கள் கூறிய பல சம்பவங்களும் சற்றே அச்சமூட்டியது.

இணையத்தால் இழந்த நிம்மதிகளை சுட்டிக்காட்டியது, கேரள சம்பவமும் பிரியாவின் அமைதியும். முகநூல் முடக்கப்பட்டால் மனதளவில் எவ்வளவு பாதிப்பு என்பதை உணர்த்தியது மருத்துவர் சிவனின் அனுபவம். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி முதல் அரசியல் கட்சிகளின் ஐ.டி விங் வரை... அட இணையத்துல இதெல்லாம் சாதாரணமப்பா.. என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார்.


ஜல்லிக்கட்டு... ஸ்டெர்லைட்.. என்று சில மறக்க இயலா.. சம்பவங்களை சுட்டி காட்டியதில் ஆய்வு நோக்கு. நிறம் குறித்த உங்களின் பார்வை அழகு . இணையத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கூறி அதனை அவர்கள் கையாண்ட விதத்தையும் கூறும் போது ஒரு நல்ல நண்பரின் உடனிருப்பை உணர்ந்தேன். உங்களால் ஹேமா ஜெய், சங்கீதா வெங்கடேஷ், கலைமணி, கோசி ஜோசப், ஆசிரியர் உமா போன்றவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

இணையத்தை நல்ல வழியில் பயன்படுத்தி வெற்றிகண்ட என் அன்பு சகோதரி தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி அவர்களை குறிப்பிட்டதில் பெருமிதம். அதே இணையத்தால் உங்களின் (ஆரூர் பாஸ்கர்)நட்பும்.. அட்டை படத்திற்கு சிறப்பாக ஓவியம் தீட்டியது டிராட்ஸ்கி மருது என்ற கணிப்பிற்கு உங்கள் (ஆரூர் பாஸ்கர்) புத்தகங்கள் பரிசாக கிடைத்ததையும் சேர்த்து கொள்ளலாம்.

மொத்தத்தில் இணையம் விரித்திருக்கும் மாயவலையில் சிக்காமல் நீந்த கற்றுத் தருகிறது இந்த புத்தகம்.

//

Thursday, January 13, 2022

அறத்துக்கு அப்பால் மீறும் அத்துமீறல்

ஒரு மகிழ்ச்சியான செய்தி !. நம்முடைய சின்ன ஒரு காத்திருப்பு முடிவடைந்து விட்டது. ஆமாம். "அறத்துக்கு அப்பால் மீறும் அத்துமீறல்" எனும் சமூகஊடகங்கள் குறித்த நம்முடைய இரண்டாவது புத்தகம் அச்சாகி விட்டது. காலையில் ராம்ஜி அதை உறுதிப்படுத்தினார்.


புத்தகத்தை வாங்கும் இணைப்பு...

https://tinyurl.com/aratthukkuappal