இணையத்தில் கண்ணில் பட்டது, எழுதியது Delilah Jordan. இரசிக்கும் படியான ஒன்று.
எந்நேரமும் எங்களைத் துகிலுரித்துப் பார்க்கிறீர்கள்.
நாங்கள் என்ன உடுத்தி இருந்தாலும்
இழை இழையாகப் பிரித்தெடுத்து
இன்னும் இன்னும் என்ன தெரிகிறது என்று,
இன்னும் எவ்வளவு பார்க்கலாம் என்று...
சதையைப் பார்ப்பதிலேயே உங்கள் மொத்தப் பார்வையும் வீணாகிறது.
கெட்டிப்பட்டுப் போன பீளைப்படலம் விழிகளை மறைத்திருக்க
'எதுவுமே தெரியல புரியல' எனக் கதறுகிறீர்கள்.
உங்கள் கண்களைக் கழுவி விட்டு எங்களைப் பாருங்கள்.
பல்லாயிரம் பரிமாணங்களுடன் பிறந்த எங்கள் மேனி கண்கள் கூசும்படி ஜொலிப்பதைக் காணலாம்.
- டிலைலா ஜார்டன்
You undress us all the time,
whatever we wear, whatever we bare;
You peel off our clothing, thread by thread,
wasting your inner eye to peer at flesh,
fooling yourselves into a fake Nirvana;
Thick molded fog blurs your vision;
You groan and moan with growing frustration.
Instead, undress your Eyes
Wash away the gound,
Get to see us, dazzlingly nude
Know what we're truly made of.
- Delilah Jordan

No comments:
Post a Comment