Sunday, November 8, 2026

சமீபத்தில் இரசித்த நெட்ஃபிலிக்ஸ் (Netflix) தொடர்

 'One Hundred Years of Solitude' 1967-இல் கொலம்பிய எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ் ஸ்பெனிஷ் மொழியில் எழுதி வெளியான நாவல். 

20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவல்களில் ஒன்று எனப் புகழப்படும் இந்த நாவல் (Buendía) புயெண்டியா குடும்பத்தின் பல தலைமுறைக் கதையைச் பேசுகிறது. தலைப்பை  'தனிமையின் நூறு ஆண்டுகள் ' என  நாம் மொழிபெயர்க்கலாம்.  நான் நாவலை முன்பு ஆங்கிலத்தில் கொஞ்சமாக வாசித்திருக்கிறேன்.

மாய யதார்த்தவாதம் எனும் magical realism வகைசார்ந்த இந்த நாவலின்  முழுவடிவம் தற்போது நெட்ஃபிலிக்ஸில் (Netflix) தொலைக்காட்சித் தொடராக வந்திருக்கிறது.  மொத்தமாக 16 எபிசோடுகள், இரண்டு சீசன்களாக வெளியாகியிருக்கிறது.  அவை அனைத்தையும் கடந்த பத்து நாட்களுக்குள் பார்த்து முடித்தேன். 

முதலில் இது குறித்து சொல்லவேண்டிய ஒரே விசயம். படமாக்கல் சிறப்பாக, பாராட்டும் வகையில் இருந்தது. இன்னொன்று, இந்த ஒளிப்படைப்பு நாவலின் வரிக்கு வரியான படமாக்கல் இல்லை. அது சிலருக்கு ஏமாற்றமாக  கூட இருக்கலாம்.

ஆனால், திரைக்கதை என்பது வேறுகளம். தலைமுறைகள் கடந்து ப


ல்வேறு பாத்திரங்கள், பல்வேறு கோணங்களைப் பற்றி பேசும் இந்த நாவலை நெட்ஃபிலிக்ஸ் குழு  முழுமையாக உள்வாங்கி  அருமையாகவே செய்திருக்கிறார்கள். 

தமிழில் இதுபோன்ற வரலாறு தொடர்பான நாவல் முயற்சிகள் வரவேண்டும். அப்படி வந்தால் நான் பரிந்துரைக்கும் முதல் நாவல் 'கோபல்ல கிராமம்', எழுத்தாளர் கி. ரா.(கி. ராஜநாராயணன்) எழுதியது.

இந்தத் தொடரில் பல வெளிப்படையான நெருக்கமான காட்சிகள் உண்டு என்பதால் அக்கம் பக்கம் பார்த்து பார்ப்பது நலம். மற்றபடி, கதையும் கற்பனையும் ஒன்றிணைந்த இந்த மாய யதார்த்தப் படைப்பைத் தவறவிடாமல் பார்க்கலாம்.



No comments:

Post a Comment