தினமலர் குழுமத்தின் நூல்வெளி தளத்தில் (noolveli.com) என்னுடைய வீடியோ நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்பினார்கள். அந்தப் ஃபோன் வந்தபோது சென்னை எக்மோரில் இன்னொரு வேலையாக இருந்தேன்.
அவர்களிடம் அலுவலகம் குறித்து விசாரித்தேன். ஸ்பென்சர் பிளாசா அருகில் இருப்பதாகச் சொன்னார்கள். ஸ்பென்சர் எக்மோரில் இருந்து கூப்பிடு தூரமென்பதால் வருவதாக சம்மதித்தேன். அது மட்டுமில்லாமல்
அன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி தென்காசி போவதாக வேறு திட்டமிருந்தது. அலுவலகத்தில் எழுத்தாள நண்பர் கார்த்திக் புகழேந்தியைச் சந்தித்தேன். முகநூலில் முன்பே அறிமுகமாகி இருந்ததால்
உடனே பழக தடையேதுமில்லை.
அவர் எந்தவொரு தயாரிப்போ, ஒத்திகையோ இல்லாமல் நேர்காணல்
இயல்பாக பேசுவதுபோல் இருக்கட்டும் என உற்சாகப்படுத்தி பேசச் சொன்னார். கேள்விகளை அவர் கேட்டார். அவர் கேட்டதும், நான் சொன்னதும் இணைப்பில் ("வனநாயகன் உருவான கதை" எனும் தலைப்பில்)
//
தொழில்நுட்பக் கல்வி கற்று, மலேசிய வங்கிகளில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் எழுத்தாளர் ஆரூர். பாஸ்கர். வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்று அங்குள்ள வங்கிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், ஐ.டி துறையின் வேலைவாய்ப்பின் ஸ்திரத்தன்மைகள் குறித்தும், பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த மலேசியாவின் சூழல்களையும் முன்வைத்து எழுதிய நாவல் ‘வனநாயகன்’. கிழக்கு பதிப்பக வெளியீடாக கடந்த ஆண்டில் வெளியானது. முன்பாக தனது கிராமத்து வாழ்க்கையை ‘பங்களா கொட்டா’ என நாவலாக எழுத, அகநாழிகைபதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து இவ்வாண்டு செப்டம்பரில் ப்ளோரிடாவை சமீபத்தில் தாக்கிய ‘இர்மா’ புயலின்போது, தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த இடர்பாடுகளையும் அனுபவங்களையும் கொண்டு, தனது மூன்றாம் நாவலை எழுதிவரும் ஆரூர் பாஸ்கர் நூல்வெளி.காம்-ற்கு அளித்த நேர்காணல்..
//
http://noolveli.com/detail.php?id=397
பேசும்போது ஆங்கிலச் சொல்லாடல்களைத் தவிர்த்திருக்கலாம். அதுபோல எனது அறக்கட்டளை, தமிழ்ப்பள்ளி பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம் என
நேர்காணல் முடிந்தபின் நினைத்துக்கொண்டேன். எழுத்து கைவர பயிற்சி தேவைப்படுவதுபோல் திரைக்கும் பயிற்சி தேவைப்படுவதாக உணர்ந்த தருணம் அது.
அந்த 15- 20 நிமிட உரையாடலை, அபாரமாக எடிட் செய்து 10 நிமிடங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். நேர்காணல் செய்த கார்த்திக்,
பதிப்பகத்தார், நூல்வெளியின் மொத்த தொழில் நுட்பக் குழுவுக்கும் நன்றி.
நூல்வெளி குழு ஒரு அட்டகாசமான இளைஞர் பட்டாளம். அவர்களுக்கு
எனது வாழ்த்துகள்.
Monday, January 8, 2018
Thursday, January 4, 2018
2017 வாசிப்புப் பட்டியல்
நண்பர்களுக்கு, 2018- புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்லும் இந்த வேளையில் கடந்த ஆண்டின் எனது வாசிப்புப் பட்டியலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழ் - புதினங்கள் (நாவல்கள்)
*மெர்குரிப் பூக்கள் - பாலகுமாரன்
*கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்
*இரும்பு குதிரை- பாலகுமாரன்
*18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
*வாசிங்டனில் திருமணம் -எழுத்தாளர் சாவி
*இரவல் காதலி- செல்லமுத்து குப்புசாமி
*கரிசல் கதைகள் (தொகுத்தவர். கி.ராஜநாராயணன்)
*விசுவாசமின் சகவாசம் - விசு
*திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன்
*பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
ஆங்கிலம்
* நினைவில் நிற்காதவை (Everything I don't Remember) - ஜோன்ஸ் ஹேசன் கேமிரி (Jonas Hassen Khemiri) நாவல்
* த மேன் இன் ஹைய் கெசில் (The Man in the High Castle,1962) -நாவல்
எழுத்தாளர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick)
* வடகொரிய அடாவடிகள் (The Girl with Seven Names, 2015) -நாவல்

* Love, Loss and What We Ate (autobiographical book)- "டாப் செஃப்" புகழ் பத்மா லட்சுமி
* The Return of the Dancing Master -Henning Mankell
* ISAAC's STORM - ERIK LARSON-நாவல்
* Confessions of an Economic Hit Man (partly autobiographical book) -Book by John Perkins
* Skipping Christmas (a comedy novel) by John Grisham-நாவல்
* உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன்-நாவல்
* The War That Saved My Life- Kimberly Brubaker Bradley (சிறார்-நாவல்)
* Save Me a Seat - Sarah Weeks and Gita Varadarajan (சிறார்-நாவல்)
* I Survived Hurricane Katrina - Lauren Tarshis 2005 (சிறார்-நாவல்)
#2017_வாசிப்பு_பட்டியல்

Wednesday, December 27, 2017
அறம்- எழுத்தாளர் ஜெயமோகன்
புதிதாக என்னை(எனது எழுத்தை) வாசிக்கத் தொடங்குபவர்கள் தனது "அறம்" தொகுப்பில் இருந்துத் தொடங்கலாம் என எழுத்தாளர் ஜெயமோகன்
ஒருமுறை சொன்னதாக நினைவு.
அந்தத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தாலும், அதில்
குறிப்பாக 3 கதைகள் மட்டும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுபவை. அவருடைய மொழியில் சொல்வதென்றால் தீராத மனஎழுச்சி கொள்ளச் செய்பவை. அந்த 3 கதைகள் "சோற்றுக் கணக்கு", "யானை டாக்டர்", "நூறு நாற்காலிகள்". ஆச்சர்யப்படத் தக்கவகையில் அந்த மூன்றும் தொகுப்பில் 4,5,6 என வரிசையாக இடம்பிடித்திருக்கிறன.
என்னைப் பொறுத்தவரை, அந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை சந்தேகமின்றி 'சோற்றுக் கணக்கு'. அப்படிச் சொல்ல அந்தக் கதையில் வரும் கெத்தேல் சாகிபு போலோருவர் எனது கல்லூரி நாட்களில் இருந்ததுகூட காரணமாக இருக்கலாம்.
அறத்தின் எல்லா சிறுகதைகளும் அவருடைய தளத்தில் இலவசமாகவும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.
அறம், ஜெயமோகன், வம்சி பதிப்பகம்
ஒருமுறை சொன்னதாக நினைவு.
அந்தத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தாலும், அதில்
குறிப்பாக 3 கதைகள் மட்டும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுபவை. அவருடைய மொழியில் சொல்வதென்றால் தீராத மனஎழுச்சி கொள்ளச் செய்பவை. அந்த 3 கதைகள் "சோற்றுக் கணக்கு", "யானை டாக்டர்", "நூறு நாற்காலிகள்". ஆச்சர்யப்படத் தக்கவகையில் அந்த மூன்றும் தொகுப்பில் 4,5,6 என வரிசையாக இடம்பிடித்திருக்கிறன.என்னைப் பொறுத்தவரை, அந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை சந்தேகமின்றி 'சோற்றுக் கணக்கு'. அப்படிச் சொல்ல அந்தக் கதையில் வரும் கெத்தேல் சாகிபு போலோருவர் எனது கல்லூரி நாட்களில் இருந்ததுகூட காரணமாக இருக்கலாம்.
அறத்தின் எல்லா சிறுகதைகளும் அவருடைய தளத்தில் இலவசமாகவும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.
அறம், ஜெயமோகன், வம்சி பதிப்பகம்
Saturday, December 2, 2017
தொழில் பிரச்சனை-2
(முதல் நிகழ்வை வாசிக்காதவர்கள், என்னுடைய முந்தைய பதிவை வாசித்துவிட்டு வரவும் )
நிகழ்வு#2 ;
முதல் உணவக உரிமையாளர் கைவிட்டபின் விருந்துக்குக் கையில் இருந்த 4
நாட்களில், அவசரம் அவசரமாக இரண்டாவது உணவகத்தை நண்பர்கள் மூலம் தேடிப்பிடித்தேன். அவர் புதிதாக தொழில் தொடங்கியிருந்தார். தரம் பராவாயில்லை ரகம். ஆனால், அவர் ஆரம்பம் முதலே விலை விசயத்தில் தெளிவில்லை. எது கேட்டாலும் குழப்பமான பதில் வந்தது.
இவ்வளவுக்கும் நான் அவரை நேரில் பார்த்து பேசினேன்.
மெனு குறித்து ஏதேனும் போனில் பேசினால், 'ஃசெப்பிடம் கேட்கவேண்டுமே' என்பார். அந்தப் பதிலுக்கும் நான் அவருக்கு திரும்ப போன் செய்ய வேண்டும். சமயங்களில் போனை கூட எடுக்க மாட்டார். பின் சில மணி நேரங்கள் கழித்து மெசேஜ் செய்வார். எனக்கும் வேறு வழியில்லாததால் நான் பொறுத்துக் கொண்டேன். ஒருவழியாக மெனு, டாலரை ($) உறுதிசெய்தோம்.
அந்த சுபநாளும் வந்தது. அவரிடம் விருந்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பு வந்துவிடுங்கள் என நேரம் சொல்லியிருந்தேன். அதனால், அவருக்கு நினைவூட்டலாக முதல் முறை 2 மணி நேரத்திற்கு முன்பு போன் செய்தேன். '
மறக்கவில்லை, சரியான நேரத்திற்கு வரும்' என்றார். பின் திரும்ப இரண்டாம் முறை நினைவூட்டலும் செய்தேன் (30 நிமிடத்திற்கு முன்). ' இதோ கிளம்புகிறோம்' என்றவர் கிரடிக்ட் கார்டையெல்லாம் வாங்கிக் கொண்டார்.
அவருக்கு சொன்ன நேரம் வந்தது. ஆனால், ஆளைக் காணோம். போன் செய்தேன். அவர் எனது எந்த அழைப்பையும் தொடர்ச்சியாக எடுக்கவில்லை. பொறுப்பை எடுத்துக்கொண்ட எனக்கோ அதிர்ச்சி.
வேறு வழியில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து உணவகத்துக்கு போன் செய்து பார்த்தோம். வாடிக்கையாளரை எதிர்கொண்டு பழக்கமில்லாத ஒரு பெண். அவர் வேறு யாரையோ கூப்பிட்டார். அவரிடம்
பிரச்சனையைச் சொன்னோம். கடைசியாக இதோ, அதோ எனச் சொல்லி அவர்கள் அனுப்பி வைத்த ஆள் 1;30 மணிநேரத் தாமதமாக வந்துசேர்ந்தார்.
அதிஷ்டவசமாக அது ஸ்னாக்ஸ் பார்ட்டி, மட்டுமில்லாமல் நாங்கள் கூடுதலாக அமெரிக்க உணவையும் ஆர்டர் செய்திருந்ததால் தப்பித்தோம்.
ஆனால், இந்திய உணவை எதிர்பார்த்து வந்த சிலர் ஏமாற்றத்தோடு திரும்பிவிட்டனர். கொஞ்சபேர் அந்த ஆள் வரும் வரை காத்திருந்தார்கள். அதனால் நிறைய உணவு மீந்துவிட்டது.
'ஏன் லேட் ?, நான் லேட்டாக வந்த உணவுக்கு பணம் தரமுடியாது
என மறுத்தேன். ' வந்தவர், உரிமையாளர் உங்களுக்கு போனில் விளக்குவார் என்றார். 1;30 மணிநேர தாமதமாக விருந்துக்கு உணவு எடுத்து வந்தவரிடம் இரண்டு வாய்ப்புகள் கொடுத்திருந்தேன். பேசியபடி பணத்தை கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக முடிந்தால் இலவசமாக கொடுங்கள் இல்லை 50% வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.
அதற்கு அவர்கள் இதை இலவசமாக தருகிறோம். ஆனால், அடுத்த
விருந்து ஆர்டரை எங்களுக்கு கொடுத்து இன்னோரு வாய்ப்பு தாருங்கள் என்றார்கள். எங்களுக்கு இன்னோரு முறை அவர்களுக்கு வாய்ப்பு
தர விருப்பமில்லாததால், அடுத்த நாள் 50 % பணத்தைக் கொடுத்து கணக்கை சரிசெய்தோம்.
இவ்வளவுக்கு பிறகும், என்னைச் சலனப்படுத்தி எனக்குத் தீராத மன உளைச்சலைத் தந்த அந்த உரிமையாளர் இன்றுவரை எனக்கு ஃபோன் செய்யவில்லை. பதிலாக அவர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
// My sincere apology, I know this shouldn't have happen. I was suppose to come with the food. That was the plan.. // இப்படி வந்த அந்தச் செய்திக்கு ஒற்றை வார்த்தை பதில் அனுப்பினேன். "நன்றி". அதைத் தவிர நான் அவருக்கு என்னதான் சொல்லுவேன். சொல்லுங்கள் நண்பர்களே.
Tuesday, November 28, 2017
தொழில் பிரச்சனை-1
வியாபரத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் வருவது தவிர்க்க இயலாது. ஆனால், அந்தப் பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள்
என்பதே வியாபாரத்தில் ஒருவரின் வெற்றி, தோல்வி என்பதைத் தீர்மானிக்கிறது. இது தொடர்பான எனது சமீபத்திய அனுபவம் இங்கே.
ஒரு பெரிய அலுவலக விருந்துக்கு இந்திய உணவுவகைகளை ஆர்டர் செய்வது தொடர்பாக இங்கிருக்கும் இரண்டு இந்திய உணவக உரிமையாளர்களிடம் நேரடியான தொடர்பில் இருந்தேன். அவர்கள் இருவரும் இந்தியாவின் ஒரே மாநிலத்தைத் சேர்ந்தவர்கள். துரதிஷ்டவசமாக சொல்லி வைத்தார்போல் இருவருக்கும் ஒரு இக்கட்டானச் சூழல் ஏற்ப்பட்டது. அதை இருவரும் கையாண்ட விதம் நேர் எதிரானது. அந்த இரண்டு நிகழ்வுகள் உங்களுக்காக.
நிகழ்வு#1 ;
முதலாமவரை நான் நேரில் அவருடைய உணவகத்தில் சந்தித்து ஆர்டர் தொடர்பாக பேசினேன். ஆரம்பம் முதலே அவருடைய பேரத்திலும், பேச்சிலும் கரார் தன்மை இருந்தது. தனது சரக்கு தரத்தால் உயர்ந்தது அதனால் விலை சற்று அதிகம்தான் எனவாதிட்டுப் பேசினார். அவருடைய அனுகுமுறையில் வெளிப்படைத் தன்மையும் இருந்தது. தலைக்கு இத்தனை
டாலர் ($) எனத் தெளிவாக சொல்லிவிட்டார். அந்த உணவகத்தின் தரம் எனக்குத் தெரியும் என்பதால் அதிக பேரமின்றி ஒரு குறிப்பிட்டத் தொகையைப் பேசி இறுதிசெய்தேன்.
விருந்துக்கு 4 நாட்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை அந்த உணவகத்தில் இருந்து போன் வருகிறது. என்னால் அந்தப் போனை எடுக்கமுடியவில்லை. நான் திரும்ப இரவில் அந்த உணவக எண்ணுக்கு
அழைத்தபோது நேரடியாக வாய்ஸ் மெசேஜிக்குச் சென்றது. அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தி எனக்கு உண்மையில் ஒரு அதிர்ச்சி தான்.
அந்த வாய்ஸ் மெசேஜ் அதிர்ச்சி செய்தி- "உணவகத்தின் சமயலறையில் எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தால் பராமரிப்பிற்காக உணவகம் வரும் 3 வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்" என்பதுதான்.
நான் வேறு வழியில்லாமல் வேறு நபர்களைத் தேட வேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன். அடுத்த நாள் திங்கள் கிழமை காலை அலுவலக எண்ணிற்கு
அந்த உரிமையாளர் அழைத்திருந்தார். தீவிபத்து விசயத்தை நேரடியாக சொன்னவர். மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 'உங்களுக்கு விருப்பமிருந்தால்
வேறு ஆளை ஏற்பாடு செய்ய இயலும்' என்றார். அவர் சொன்ன உணவகத்திற்கு நல்ல பெயர் இல்லாததால், நான் மறுத்தேன். அவர் மறுபடியும் 'ஐ ம் எக்ஸ்டீமிலி சாரி. மை அப்பாலஜிஸ்' என மனதார பேசினார். அடுத்த முறை தேவைப்படும் போது கண்டிப்பாக தொடர்புகொள்ளச் சொன்னார். சுபம்.
நிகழ்வு#2 ஐ நாளை பதிவிடுவேன்.
நிகழ்வு#2 ஐ நாளை பதிவிடுவேன்.
Wednesday, November 15, 2017
எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்
எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் குறித்து சமீபத்தில் எழுத்தாளர் நண்பர் கார்த்திக் புகழேந்தி ஒரு முகநூல் பதிவு எழுதி அவரைப் பற்றிய நினைவுகளைக் கிளரிவிட்டிருந்தார்.

ஸ்டெல்லா புரூஸ் எனக்கு 90களில் வெகுஜன இதழில்களின் வழியாக அறிமுகமானவர். அவருடைய பெயரில் இருக்கும் வசிகரத்தால்தான் நான் முதலில் ஈர்க்கப்பட்டேன் எனச் சொன்னால்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
( இயற்பெயர்- ராம் மோகன்).
நெஞ்சதைத் தொடும் பல சிறுகதைகள், புதினங்கள்(நாவல்கள்) எழுதி
புகழ் அடைந்த அந்த எழுத்தாளர் தனது 67வது வயதில் (2008) தனது மனைவி இறந்தச் சோகத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை மட்டும் ஏனோ மனம் நம்ப மறுக்கிறது. ஆனாலும், பல மனிதமனங்களின் உள்ளடுக்களில் சஞ்சாரிக்கும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கையில் இத்தகைய விநோதங்கள் சாத்தியமே எனும் குரலும் என்னுள் கேட்கத்தான் செய்கிறது.
அவர் தன் கடைசிகாலத்தில் வறுமையில் வாடிக்கொண்டிருந்தார் எனும்
செய்தி மேலும் துயரமளிப்பதாக இருக்கிறது.
அவருடைய "25 வருடக் கதை" எனும் சிறுகதையை முடிந்தால் வாசித்துப்பாருங்கள். அது வசதிவாய்ப்பிற்காக, தன் கொள்கைகளை விட்டு ஒரு பணக்கார வீட்டில் பெண் எடுத்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு டாக்டரின் கதை. நல்ல கதையம்சம். செறிவான எழுத்து.
நன்றி- படங்கள் இணையம்.

Wednesday, November 1, 2017
ஹார்வர்டு தமிழ் இருக்கை
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு சமீபத்தில் ரூ 10 கோடி
நிதி வழங்கியிருப்பதன் மூலம் இந்தச் செய்தி தமிழகம் முழுமையும்
சென்று சேர்ந்திருக்கிறது. அது தொடர்பான சில தகவல்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை
மேற்கொள்ளவும் வசதி செய்து தரும் முயற்சி இது. இதற்கு தலா 500,000 அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கி தொடங்கிவைத்த ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் அமெரிக்க வாழ் மருத்துவர்கள். மருத்துவர்
ஜானகிராமன் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதில் காவிரி மைந்தர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்.
மருத்துவர் ஜானகிராமன் அவர்களை 2016- அமெரிக்காவின் நீயுஜெர்சி பெட்னா பேரவைக் கூட்டத்தில் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. ( படத்தில், வலதுபுறம் மருத்துவர் ஜானகிராமன், இடதுபுறம் திரு. பாலசந்திரன் இ.ஆ.ப எனது பங்களா கொட்டா புதினத்தை பெற்றுக் கொண்டபோது ) மருத்துவருடன் அவருடைய மனைவி, மகனுடன் (அவரும் ஒரு மருத்துவர்) தனிப்பட்ட முறையில் உரையாடும் ஒரு நல்ல வாய்ப்பும் அன்று கிடைத்தது.
அன்றைய விழாவில் இருக்கையை அறிமுகம் செய்து உரையாற்றிய மருத்துவர் ஜானகிராமன் இந்த எண்ணம் உருவான ஒரு சுவையான சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
அமேரிக்காவின் ஹவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர்.
அவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் உதயமானது தான்
தமிழுக்கான நிரந்தர இருக்கை என்றார்.
ஜானகிராமன், 'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என
அம்மையாரிடம் கேட்டிருக்கிறார். வைதேகி அவர்கள்
அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொல்லியிருக்கிறார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ எனச் சொன்னாதாக நினைவு கூர்ந்தார். (இன்னொரு செய்தி- வைதேகி அம்மையாரிடம் தொலைபேசி வழியாக வாரமொரு முறை சங்கஇலக்கியம் பயிலும் அமெரிக்க நண்பர்கள் குழுவில் அடியெனும்
இருக்கிறேன்)
ஹார்வர்டில் தமிழ் இருக்கை திட்டம் அயல்நாட்டு தமிழர்களாலும் தமிழுக்கும், தமிழகத்திற்கும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என நினைக்கிறேன். இருக்கை குறித்தான மேலும் விரிவான தகவல்களை அவர்களுடைய
(http://harvardtamilchair.org/) இணையதளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அவர்களின் தளத்தில் உள்ள தகவல்களின்படி இருக்கை அமைக்கத் தேவையான 6 மில்லியன் டாலர்களில் 2.67 மில்லியன்கள் நிதி திரட்டியிருக்கிறார்களாம். இதைச் சமூக வலைத்தளங்களின் வழியாக முன்னெடுப்பதில் தீவிரக் களப்பணி ஆற்றும் நண்பர்கள்
பாராட்டுக்குரியவர்கள்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்யச் சொன்ன பாரதியின் கனவு மெய்பட வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.
நிதி வழங்கியிருப்பதன் மூலம் இந்தச் செய்தி தமிழகம் முழுமையும்
சென்று சேர்ந்திருக்கிறது. அது தொடர்பான சில தகவல்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை
மேற்கொள்ளவும் வசதி செய்து தரும் முயற்சி இது. இதற்கு தலா 500,000 அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கி தொடங்கிவைத்த ஜானகிராமனும், திருஞானசம்பந்தமும் அமெரிக்க வாழ் மருத்துவர்கள். மருத்துவர்
ஜானகிராமன் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதில் காவிரி மைந்தர்கள் அனைவரும் பெருமை கொள்ளலாம்.
மருத்துவர் ஜானகிராமன் அவர்களை 2016- அமெரிக்காவின் நீயுஜெர்சி பெட்னா பேரவைக் கூட்டத்தில் சந்திக்கும் வாய்ப்புகிடைத்தது. ( படத்தில், வலதுபுறம் மருத்துவர் ஜானகிராமன், இடதுபுறம் திரு. பாலசந்திரன் இ.ஆ.ப எனது பங்களா கொட்டா புதினத்தை பெற்றுக் கொண்டபோது ) மருத்துவருடன் அவருடைய மனைவி, மகனுடன் (அவரும் ஒரு மருத்துவர்) தனிப்பட்ட முறையில் உரையாடும் ஒரு நல்ல வாய்ப்பும் அன்று கிடைத்தது.அன்றைய விழாவில் இருக்கையை அறிமுகம் செய்து உரையாற்றிய மருத்துவர் ஜானகிராமன் இந்த எண்ணம் உருவான ஒரு சுவையான சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
அமேரிக்காவின் ஹவாய்த் தீவில் வசித்துவரும் வைதேகி ஹெர்பர்ட் பதினெட்டுச் சங்க நூல்களையும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர்.
அவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவொன்றில் உதயமானது தான்
தமிழுக்கான நிரந்தர இருக்கை என்றார்.
ஜானகிராமன், 'என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் ஆலோசனை என்ன?’ என
அம்மையாரிடம் கேட்டிருக்கிறார். வைதேகி அவர்கள்
அந்தக் கணம் மனதில் தோன்றியதைச் சொல்லியிருக்கிறார்... 'உலகப் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது. தொன்மையான தமிழ் மொழிக்கு ஓர் இருக்கை அங்கே அமையுமானால், உலகமே பயனுறும். தமிழுக்குப் பெருமை; தமிழர்களுக்கும் பெருமை’ எனச் சொன்னாதாக நினைவு கூர்ந்தார். (இன்னொரு செய்தி- வைதேகி அம்மையாரிடம் தொலைபேசி வழியாக வாரமொரு முறை சங்கஇலக்கியம் பயிலும் அமெரிக்க நண்பர்கள் குழுவில் அடியெனும்
இருக்கிறேன்)
ஹார்வர்டில் தமிழ் இருக்கை திட்டம் அயல்நாட்டு தமிழர்களாலும் தமிழுக்கும், தமிழகத்திற்கும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என நினைக்கிறேன். இருக்கை குறித்தான மேலும் விரிவான தகவல்களை அவர்களுடைய
(http://harvardtamilchair.org/) இணையதளத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அவர்களின் தளத்தில் உள்ள தகவல்களின்படி இருக்கை அமைக்கத் தேவையான 6 மில்லியன் டாலர்களில் 2.67 மில்லியன்கள் நிதி திரட்டியிருக்கிறார்களாம். இதைச் சமூக வலைத்தளங்களின் வழியாக முன்னெடுப்பதில் தீவிரக் களப்பணி ஆற்றும் நண்பர்கள்
பாராட்டுக்குரியவர்கள்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்யச் சொன்ன பாரதியின் கனவு மெய்பட வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.
Subscribe to:
Posts (Atom)