"அத சொன்ன வாய்க்கு முதல்ல சக்கரை போடனும் " என்றோரு பதம்
ஊர் பக்கம் சொல்வார்கள். அதாவது ஒரு விசயம் ஒருவர் சொன்னதுபோல் நடந்துவிட்டால் சொன்னவரை பாராட்டும் விதத்தில் அப்படிச் சொல்வார்கள்.
வனநாயகன் புதினத்தின் (நாவல்) உயரத்தை முதலில் சரியாக கணித்தவர் என்ற முறையில் நான் முதலில் சர்க்கரை போட நினைப்பது எனது நீயூயார்க் நண்பரும் பதிவருமான ஆல்பி (நியூயார்க் பரதேசி) அவர்களுக்கு தான். வனநாயகனை முன்வைத்து அவர் எழுதிய வலைப்பதிவு இங்கே.
http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_9.html
நாவலுக்கு பல பாராட்டுகள் வரும் இந்தத் தருணத்தில் அவரைப் பற்றி -
ஆல்பி பதிவுலகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர். நியூயார்க்கில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் உயர்பதவியில் இருக்கிறார். இலக்கியத்தில் நல்ல பரிச்சம் உள்ளவர். சிறப்பான பயணக்கட்டுரைகள் எழுதக்கூடிவர். இளையராஜாவின் தீராத ரசிகர். மேடை பேச்சாளர் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக தொடர்ந்து வாசிப்பவர். ஒரு முறை பேச்சினூடே தனது லைப்ரரி கலெக்சனுக்கு வீட்டில் இடமில்லாமல் தனது நூற்றுக்கணக்கான தமிழ் புத்தகங்களை உள்ளூர் தமிழ்சங்கத்துக்கு நன்கொடையாக தந்ததை நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு வாசிப்பில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்.
அவர்தான் எனது எழுத்துகளை விடாமல் வாசித்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வனநாயனின் எல்லா கட்டங்களிலும் உறுதுணையாக இருந்தவர். தமிழில் இதுவரை எழுதப்படாத கதைக்களன். முற்றிலும் மாறுபட்ட கதைக்கரு. மனிதர்களுடன் நெருக்கமாக பேசும் பாணி. பலவிதங்களில் வித்தியாசம் எனச் சொல்லி என்னை இயக்கியவர்.
" மலேசியாவுக்கு ஒருநாளைக்கு எத்தன ஆயிரம் பேர் போறான் ? எத்தன பேர் அனுபவத்தை எழுதுறான் ? எத்தன பேருக்கு அந்த நாட்டை பத்தி சரியா தெரியும். உங்களுக்கு நல்லா எழுத வருது. கண்டிப்பாக எழுதுங்க". என தோள் கொடுத்தவர்.
எழுதவேண்டும் எனும் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் அவர்
வைத்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஒரு கூடுதல் வேகம் வந்தது. அந்த வேகமே இரவுபகலாக மலேசியா தொடர்பான பல புத்தகங்களைத் தேடி தேடி வெறித்தனமாக படித்து எழுத வைத்தது.
அவர் ஒரு விசயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார். அவர் நல்ல எழுத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பிரபல பதிப்பகம் கண்டிப்பாக அவசியம் என திடமாக நம்பினார். அந்தவிதத்தில் என்னை கிழக்கு பதிப்பகத்தை அணுகச் சொல்லி வழிகாட்டியவரும் அவரே.
வனநாயகன் தொடர்பாக கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றிசொல்லும் அதேவேளையில் இன்று ஆல்பியையும் இன்னும் ஓரிரு நண்பர்களையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.
அவருக்கு நன்றி சொல்லும் அதேவேளையில் இதுபோன்ற நட்புகள் கடல்கடந்த தேசத்தில் கிடைப்பது அரிது என்பதையும் தெரிந்திருக்கிறேன். நன்றி ஆல்பி சார் !!
நண்பர்களே எழுத்தாளர் சுஜாதாவுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு எனத் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமாயிருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
ஒருமுறை சுஜாதாவிடம் 'எந்த வட்டாரத்துப் பேச்சுத் தமிழ் உங்களைக் கவர்ந்திருக்கிறது ?' என்ற கேள்விக்கு 'என்னைக் கவர்ந்த பேச்சுத் தமிழ், திருநெல்வேலித் தமிழ்தான் என்றிருக்கிறார். அதோடு விடாமல் 'என்னடே' என்பதே மரியாதைச் சொல். 'புலிய அங்க வச்சுப் பாத்தேன்' போன்ற வசீகரமான பிரயோகங்கள், எளிய ஜனங்களின் எளிய மனங்களின் வெளிப்பாடு' என சிலாகித்திருக்கிறார். இப்போ தொடர்பு புரிஞ்சுதா ? ;)
நானும் சுஜாதாவின் பதிலோடு இணைந்துப்போவதில் மகிழ்ச்சி. 'சரி, அப்போ இரண்டாவது ? ' என நீங்கள் கேட்டால் கோவையின் 'ஏனுங்க' வைச் சொல்வேன் என நினைக்கிறேன். இப்படிச் சொல்லுவதால் மற்ற வட்டார வழக்குகள் பிடிக்கவில்லை என நீங்கள் புரிந்துக்கொள்ளத் தேவையில்லை.
ஆனாலும், திருநெல்வேலி தமிழை புரிந்துக்கொள்ள சில நுட்பங்கள் தேவை. "இந்தா இந்த வாரியலை வச்சு, வாச தூத்துட்டு வா" என்றால் "என்னது துப்பணுமா ?" எனக் கேட்காமல் துடைப்பத்தால் வாசலை சுத்தம் செய் எனப் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்புறம், "ஏன்ல இப்படி படப்பயம் போடுத?" என்றால்" ஏன் இப்படி கூப்பாடு/சத்தம் போடுகிறாய்" எனப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதுபோல "எனக்கு காய்ச்சலடிக்கி" எனச் சொன்னால் "எனக்கு ஜூரம்" எனப் புரிந்துக் கொள்ளவேண்டும்.
இப்படி வீட்டில் திருநெல்வேலி பாசை பேசிக்கொண்டிருந்த என் அம்மாவையும் கடந்த 40 வருடங்கள் மாற்றிதான் விட்டது. ஆமாம், அவள் பேச்சில் நெல்லை தமிழ் வாடை குறைந்து விட்டது. "வீட்டுல எல்லாரும் சும்மா (சுகமா) இருக்காளா?" எனக் கேட்காமல் "வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? " எனக் கேட்க பழகிவிட்டாள். ஆனாலும், இப்போதும் வீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நெல்லை வாட்டார வார்த்தைகள் காதில் விழத்தான் செய்கிறது.
இங்கே சினிமா, தொலைக்காட்சி, நகர்மயமாதல் தாண்டி உலகமயமாக்கலும் தன் பங்கிற்கு எல்லா ஊர்மக்களையும் தங்களின் வட்டார மொழியை விட்டு வேறு ஏதோ மொழியை நோக்கி திருப்பியிருக்கிறது. "ஸ்கூல் முடிச்சு, காலேஜ்க்கு மெட்ராஸ் போனபோதே திருநெல்வேலி பாசைக்கு நோ சொல்லிட்டேன்" என்கிறான் கலிபோர்னியாவிலிருக்கும் என் உறவினன். இது தான் இன்றைய நிதர்சனம்.