பேரா.ஹாஜா கனியுடனான எனது கலகலப்பான நேர்காணலின் 2-வது பகுதியைக் கீழே இணைத்திருக்கிறேன். பாருங்கள்.
Sunday, August 7, 2022
பேரா.ஹாஜா கனி நேர்காணல் (Part-2) - முழு வடிவம்
பேரா.ஹாஜா கனி நேர்காணல் (Part-2) - முன்னோட்டம்
நண்பர் பேரா.ஹாஜா கனியுடனான எனது நேர்காணலின் 2-வது பகுதி எங்கே ? எங்கே? என பலர் முகநூல் உள்பெட்டியைத் தட்டிவிட்டார்கள். அவர்களுக்காக அதன் 2 நிமிட முன்னோட்டத்தை ஒலி மேம்படுத்தி இணைப்பில் தந்திருக்கிறேன். பாருங்கள்.
இந்த இரண்டாவது பகுதியில் அவருடைய அரசியல், பொது வாழ்க்கை, நட்புவட்டம் போன்ற பல கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். கலகலப்பான அந்தச் சந்திப்பின் முழுமையான வடிவத்தை வரும் ஞாயிறு அன்று தருவேன். காத்திருங்கள்.
Friday, August 27, 2021
சின்னிஜெயந்த் குடும்பத்துக்கு வாழ்த்துகள் !
"காசு பாத்து வளர்ந்த பசங்க படிக்காது. இந்த காலத்து பசங்களுக்கு அப்ப மாதிரி டிரைவே இல்ல.." என்றெல்லாம் யாராவது சொல்வதைக் கேட்கும் நேரத்தில் இது போன்ற சில விசயங்கள் கண்ணில்படுகிறது.
அது, திரைநடிகர் சின்னிஜெயந்தின் மகன் இந்திய ஆட்சித் துறை ( IAS) தேர்வெழுதி தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகி இருக்கிறார் என்பதாகும்.
சமுதாயத்துக்குப் பங்களிப்பு தரும்படியான வேலையைத் தேடிக்கொள் என பெற்றோர்களாகிய நாம் என்னதான் சொன்னாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல், நண்பர்கள், பழகும் மனிதர்களின் தாக்கம் என்பது மிக அதிகம்.
அந்த வகையில் , மகனிடம் உயரிய சிந்தனையை விதைத்து அதை வென்றெடுத்த சின்னிஜெயந்த்-தின் குடும்பம் பாராட்டுதலுக்கு உரியது.
படங்கள் நன்றி- ஆனந்தவிகடன்.
Friday, June 26, 2020
ராக்கெட் தாதா - ஜி. கார்ல் மார்க்ஸ்
அதுபோல அவர் எல்லா படைப்புகளுக்கும் நற்சான்று கொடுத்துவிடுபவரும் அல்ல. தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத கறார் பேர்வழியான அவர் கடந்த ஆண்டு ஜி. கார்ல் மார்க்ஸின் "ராக்கெட் தாதா" நூலை வெளியிட்டு பேசும் போது ஒரு விசயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, இந்த நூலின் எழுத்தாளரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. முன் அறிமுகம் எதுவுமில்லை. ஆனால், நல்ல படைப்பாளர் என்பதால் ஊரில் இருந்து சென்னைக்கு வந்து வாழ்த்துகிறேன் எனச் சொல்லி இருந்தார்.
நாஞ்சில் நாடனைக் கவர்ந்த எழுத்து எனும் காரணத்துக்காகவே நான் அந்த நூலை கிண்டிலில் தேடிப்பிடித்து வாங்கி வாசித்தேன். எழுத்தாளர் ஏமாற்றவில்லை. ஆமாம், ஆசிரியர் சொற்சிக்கனத்தோடு காத்திரமாகக் கதை சொல்லும் நேர்த்தி தெரிந்தவர். உதாரணமாக ராக்கெட் தாதா எனும் அந்தக் கதையே ஒரு திரைப்படத்துக்கான, நெடுங்கதைக்கான பரப்பியல் கொண்டது. ஆனால், அதை மிக அழகாக ஒரு சிறுகதைக்குள் அடக்கியிருக்கிறார். செறிவான எழுத்து.தொகுப்பில் தொத்தமாக பதினோரு கதைகள். ஆணோ, பெண்ணோ வாசிப்பவர்கள் எளிதில் தொடர்புபடுத்தக் கூடிய பல பாத்திரங்கள். அதில் காஃபி ஷாப் எனும் பகடி-கதையும் அடக்கம். சில கதைகள் 1980களில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அதுபோல, தொகுப்பின் கடைசி கதை எத்தனைப் பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை. மற்றபடி வாசிக்கலாம்.
நூல் : ராக்கெட் தாதா
ஆசிரியர்: ஜி.கார்ல் மார்க்ஸ்
விலை: ₹190
ISBN: 9789387333543
வெளியீடு: எதிர் வெளியீடு
வகை: சிறுகதைகள் / குறுங்கதைகள்
Tuesday, June 2, 2020
நீங்கள் கவிதை எழுதுபவரா !?
பூக்களை விற்பவள்,
கூடை நிறைய சுமந்து திரிகிறாள்
உன் வாசத்தை..
****
நம் பெயரை ஒருசேர
எழுதித் தந்தேன்
காதலுக்கு முகவரியாய் !
என்பது மாதிரியான விடலைக் கவிதைகளை அழகான வண்ணப்
படங்களுடன் அச்சிட்டிருந்தார்கள்.
இதுபோல கவிதைகளை வாசித்தேன், எழுதினேன் என பொதுவில் சொல்லவே பலர் கூச்சப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.
ஏனென்றால், இன்றைய தேதியில் கவிதை எழுதுவது என்பது தேசதுரோகம் போன்றொரு பிம்பத்தை அறிவார்ந்த சமூகத்தில் கட்டமைத்திருக்கிறார்கள். அப்படியே யாராவது தப்பித் தவறி கவிதை எழுத நேர்ந்தாலும் அந்தக் கவிதையில் அது இல்லை இது இல்லை என கேலியோடு ஒதுக்கும் மனப்பான்மையே இன்று இருக்கிறது.
ஏன், அது இன்றைய அவசரமும் கூட.
Monday, May 25, 2020
தித்திக்கும் வாசிப்பனுபவம்
தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஏப்ரல்-16 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் நேரலை நிகழ்ச்சியில் பேசினேன்.உரையின் தலைப்பு "தித்திக்கும் வாசிப்பனுபவம்".
இந்தத் தகவல் தொடர்பு காலத்திலும் வாசிப்பு நமக்கு ஏன் அவசியமாகிறது என்பதை மையக் கருத்தாக கொண்டு பேசினேன்.
பார்த்த அனைவரும் பயனுள்ள 45 நிமிடங்கள் என்றே சொன்னார்கள். குறிப்பாக, பலர் கேள்வி-பதில் பகுதியைப் விரும்பியதாகவும் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் சொன்னார்கள். நிகழ்வுக்குப் பின் பலர் மின்னஞ்சலும், வாட்ஸ்-அப்-லும் தொடர்பு கொண்டார்கள். கூடவே பல நூறு புதிய நட்பு அழைப்புகள்.
தனிப்பட்ட முறையில் எனக்கும் நேரலை ஓரளவு திருப்திகரமாகவே இருந்தது. சில விடுபடல்கள் இருந்தாலும், நான் சொல்லவந்த விசயங்களைச் சொல்லிவிட்டதாக நினைக்கிறேன் . தொடக்கத்தில் சொன்னது போல கருத்துகளை, உணர்வுகளைப் பெரும்பாலும் தட்டச்சு செய்து பழகியவர்களுக்கு நேரலை என்பது சற்று புது அனுபவமாகவே இருக்கும். ஏன் மேடையில் பேசி பேசிப் பழகியவர்களுக்கே கூட நேரலை என்பது கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும். ஆனால், அதற்காக அச்சப்படத் தேவையில்லை எனும் நம்பிக்கை இப்போது வந்திருக்கிறது.
நிகழ்ச்சிக்கு எழுதி வைத்து வரிக்கு வரி வாசிப்பது போல இல்லாமல் முன் தயாரிப்பாக சில முக்கிய விசயங்களை மட்டும் குறிப்பாக எடுத்து வைத்திருந்தேன். அலுவலகத்தில் வேலை பளு சற்று அதிகமாக இருந்ததால் அதையும் முதல் நாள் இரவு மட்டுமே செய்ய முடிந்தது. முக்கியமாக இந்த சந்திப்பில் என்னைப் பற்றி அதிகம் பேசாமல் வாசிப்பைக் அறிமுகப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதே சமயத்தில், தனிப்பேச்சு 30 நிமிடங்களைத் தாண்டாமல் முக்கியமாக பார்ப்பவர்களைத் தூங்கவைக்காமல் இருக்க வேண்டும் என்பதிலும் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.
நிகழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட நேர அவகாசத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை நானே விதித்துக் கொண்டதால் தான் தமிழ் நூல்கள் பற்றி விரிவாக பேச இயலவில்லை. மற்றபடி வேறொன்றும் இல்லை. அதனால் என்ன, இன்னொரு சந்தர்ப்பத்தில் தமிழ் புத்தக வாசிப்பு அனுபவத்தைப் பற்றி தனியாகவே பேசலாம். அதுபோல, என்னுடைய நட்பு வட்டத்திலும் பல மிகச் சிறந்த ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் தனிதனியாக பதிவுகளோ இல்லை நேரலையோ செய்யவேண்டும். அப்படிச் செய்வதென்றால் நான் முதலில் தமிழ் அறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன் ஐயா அவர்களிடமிருந்துதான் தொடங்கவேண்டும். அவர் பல்லாண்டுகள் ம.பொ.சி அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர் போன்ற பல பெருமைகளுக்குரியவர்.
நேரலையில் ஓஷோ எழுதிய ஒரு புத்தகத்தின் பெயர் அப்போது சட்டென நினைவுக்கு வரவில்லை. நேரலை முடிந்தவுடன் சரியாக நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகம் Emotional Wellness: Transforming Fear, Anger, and Jealousy into Creative Energy. அலைபாயும் மனத்தைப் பக்குவப்படுத்தும் அற்புதமான புத்தகம். ஒருவர் மட்டும் "நீங்கள் பேசும்போது சேரை மட்டும் கொஞ்சம் ஆட்டாமல் பேசுங்களேன்" என்ற ஆலோசனை சொன்னார். ஒரு தோழி இரண்டு மூன்று புத்தகங்கள் ஒருசேர வாசிப்பதன் சாதக பாதகங்களைப் பற்றி வாட்ஸ்-அப்பில் செய்தி அனுப்பி இருந்தார்.
இதைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
முழுமையான உரை இங்கே
Saturday, April 4, 2020
மெக்ஸிகோ - இளங்கோ (பிரபஞ்சன் நினைவுப் பரிசு 2019)
தன் வாழ்வைப் புதிதாக நுகரும் அனுபவமே எழுத்தாளர் இளங்கோவின் (கனடா) 'மெக்ஸிகோ' நாவலாகி இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் குறித்தான தனியான பார்வை என்று ஒன்று இல்லை என்றே சொல்லாம். பொது புத்தியில் பெண்கள் குறித்தான ஒரு பார்வையே, ஒரு சராசரி ஆணின் பார்வையாக இருக்கிறது. அந்தப் பார்வையுடன், ஒரு பெண்ணை நெருங்கும் ஒருவன் அவள் குறித்து தான் அதுவரை உருவகப்படுத்தியிருந்த பிம்பம் உடையும் போது உண்மையில் பேரதிர்ச்சி கொள்கிறான். அந்த அதிர்ச்சி சிலருக்கு காதலிக்கையில் வருகிறது. சிலருக்கு, திருமணத்திற்கு பின் வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவன் மீண்டு எவ்வாறு தன்னை வழி நடத்திக் கொள்கிறான் என்பதில்தான் ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருப்பதாக நினைக்கிறேன்.
அந்த வகையில், தனது உறவுகளை நிலையாக தக்கவைத்துக் கொள்ள இயலாத புலம் பெயர்ந்த ஒருவன் மெக்ஸிக இளம்பெண்ணின் காதலில்
பெரிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் இயல்பாக விழுவதைக் கவித்துவமாக இளங்கோ சொல்லியிருக்கிறார்.
அதற்காக நான் இளம் இருளில் இருந்தேன். அந்த இளம் பெண்ணைப் பார்த்தவுடன் ஆயிரம் மின்னலைப் பார்த்தது போல் அதிர்ந்தேன் என்றெல்லாம் மிகைப்படுத்தி எழுதாமல் அன்பு மலர்வதை மிக இயல்பாக சொல்லியிருக்கிறார். "இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்க்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்". (பக்கம் -50) என்பதைக் கதையோடு வாசிக்கும் போது அந்த அனுபவதை நமக்குக் கடத்துவதில் மிகச் சிறந்த எழுத்தாளராக மிளிர்கிறார். அதுபோல, பல தருணங்கள். ஆசிரியருக்கு வாழ்த்துகள் !
ஆண்களும் பெண்களும் இரு வேறு உலகில் இருந்து வந்தவர்கள். அவர்களுடைய மதிப்பீடுகள் வேவ்வேறாக இருந்தாலும் இருவரும் இணைந்து வாழ்வது சாத்தியமே எனும் நம்பிக்கையை விதைக்கும் நூலாக இதைப் பார்க்கிறேன். நூலில், நாயகனின் மன இறுக்கத்தைச் சற்று குறைத்திருக்கலாமோ எனத் தோன்றும் தருணங்களை எல்லாம் "அவள்" தனது ஆளுமையால் இட்டு நிரப்புகின்றாள். அதுபோல, படைப்பில் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் அழகிய உரையாடல்களால் அழுத்தம் பெறுகின்றன. தொடர்ந்து புலம் பெயர் இலக்கியங்கள் பல எழுதுங்கள் இளங்கோ !
காதலிப்பவர்கள் திருமணத்துக்கு பின் வரும் வாழ்வு குறித்த பெரிய அவதானிப்பு இல்லாமல் அந்தப் பந்தத்தில் நுழைவதும், திருமணபந்தத்தில் இருப்பவர்கள் அதற்கு முன்பான தனது வாழ்வு குறித்து மறந்து போவதுமே (அல்லது தேவையற்றதை நினைவில் வைத்திருப்பதும்) பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.
அந்த வகையில், எழுத்தாளர் இளங்கோவின் இந்தப் படைப்பு ஆண் பெண் உறவைத் தன் வழியில் மீட்டுருவாக்கம் செய்திருப்பதால் வாசிக்கவேண்டிய ஒரு படைப்பாகிறது.
நூல் : மெக்ஸிக்கோ
(2019-ல் பிரபஞ்சன் நினைவுப் பரிசு பெற்ற நாவல்)
ஆசிரியர் : இளங்கோ
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : ₹ 200.00
********************
Sunday, February 23, 2020
உலக கவனம் பெற்ற ஓராங் ஊத்தான் புகைப்படம்
மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் இருக்கும் "போர்னியோ" ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவு. எனது 'வனநாயகன் -மலேசிய
நாட்கள்' வாசித்தவர்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ பற்றி தெரிந்திருக்கும்.
மிகப் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட இந்தத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் இருக்கிறது. மேற்சொன்ன மூன்று நாடுகளும் போட்டிபோட்டு இந்தத் தீவின் இயற்கை வளத்தைப் பல்லாண்டுகளாக சீரழித்துவருகின்றன. அதனால் அந்த தீவில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, போர்னியாவின் தனிச்சிறப்பான ஒராங்குட்டான் குரங்குகள். அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வனநாயன் நாவலின் அட்டைப்பட நாயகனும் ஒரு ஒராங்குட்டான் குரங்கே.மனிதர்களுக்கு அடுத்து அறிவு கொண்ட இனமாக கருதப்படும் இந்த ஓரங்குட்டான் இனக் குரங்குகள் விவசாயத்திற்கு இடையூறு செய்வதாக, மாமிசத்திற்காக, அதனுடைய அழகான கறுப்பு குட்டிகளுக்காக, விபச்சாரத்திற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்படுகின்றன. இப்படி மனித மிருகங்களால் வேட்டையாடப்படுவதால் தனது வாழ்விடங்கள் சூரையாடப்படுவதால் கடந்த மூன்று தலைமுறைகளுக்குள் மட்டும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை 80% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சமீபத்தில் காட்டில் வந்து சேற்றில் சிக்கிய மனிதன் ஒருவனுக்குக் கை கொடுத்து உதவுவது போலோரு புகைப்படம் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்தமாத தொடக்கத்தில், ஏதோ காரணங்களுக்காக காட்டுக்குள் வந்த ஒரு நபர் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கிக்கொண்டாராம். அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவருடைய நிலையைப் பார்த்த ஒரு ஓரங்குட்டான் எங்கிருந்தோ ஓடி வந்து தனது கைகளை நீட்டி அவர் கரைக்கு வர உதவியிருக்கிறது.
இப்படிச் சேற்றில் சிக்கிய மனிதன் அருவாள் போலோரு ஆயுதத்தைக் கையில் வைத்து இருந்தாலும் அந்த மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும் போது ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டிய அந்தக் குரங்கின் செயலை பலர் இணையத்தில் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர் 'இது கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சி'. 'மனிதன் மறந்த கருணையை இன்னமும் குரங்குகள் நினைவில் வைத்திருக்கின்றன'. 'விலங்குகள் மனிதர்களைப் போலவும் மனிதர்கள் குரங்குகள் போலவும் நடந்து கொள்கிறோம்' என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். நல்லவேளை, இதெல்லாம் அந்தக் குரங்கிற்கு எதுவும் புரியப் போவதுமில்லை. புரிந்தாலும் அது நம்மைப்போல அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதுமில்லை.
இதுபோன்ற விலங்குகள் நம்மிடம் யாசித்து கேட்பதெல்லாம் குறைந்த பட்சம் எங்களையும் இந்த பூமியில் வாழவிடுங்களேன் என்பதுதான். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையையே அடக்கி தெருவில் பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் மனிதனுக்கு இந்தக் குரங்குகளின் குரல் கேட்கவா போகிறது ?
Thursday, February 13, 2020
தமிழ் வலைத்திரட்டி
திரட்டி ஒருங்கிணைக்கும் தேவை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக பிரத்தியோக இணையதளம் ஒன்றை இதற்கென
நிறுவ இருக்கிறோம்.
நான் இணைந்து பயணிக்கிறேன். பொதுவாக, முகநூல் தாண்டிய எழுத்துகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் வலைப்பூக்கள் எனும் பிளாக்-களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து,
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள். தென் அமெரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற தெரிந்த பிரபல நாடுகளைத் தாண்டி வியட்நாம், அந்தமான் போன்ற குட்டி குட்டி நாடுகளில் இருந்தெல்லாம் தமிழில் பதிவுகளை எழுதுகிறார்கள். அதுவும் காமோ சோமா என்றில்லாமல் பலர் நல்ல உள்ளடக்கத்தோடு எழுதி 'அடடே' எனச் சொல்ல வைக்கிறார்கள். நான் ஆச்சர்யப்பட்ட இன்னொரு விசயம் பதிவுகளின் நேர்த்தி (எல்லா பதிவுகளும் அல்ல). ஒரு பயணக்குறிப்பாக இருந்தாலும் கூட பொருத்தமான படங்களை, காணொலிகளை மிகச் சரியான இடத்தில் பொருத்தி, பத்தி பிரித்து தேவைப்பட்டால் வண்ண பாண்டுகளைப் பயன்படுத்தி
மிகவும் அழகாக எழுதுகிறார்கள். இப்படி எழுதுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பதும் ஆச்சர்யமில்லை.
தளம் குறித்த மேலதிக விவரங்களை விரைவில் பகிர்கிறேன்.
Wednesday, January 29, 2020
2019-இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல்
1, The 4-Hour workweek- Timothy Ferriss
2, How to win friends and influence people - Dale Carnegie
3,வணக்கம் - வலம்புரி ஜான்
4, ஒரு நாடோடியின் நாட்குறிப்புகள் -சாரு நிவேதிதா
5, ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி
6,மழைக்கால இரவு- தமிழினி
7.வாழ்க திராவிடம் - இனமானப் பேராசிரியர் அன்பழகன்
8.கன்னிவாடி - எழுத்தாளர் க.சீ.சிவக்குமார்
9.ஒரு பெண் கதை சொல்கிறாள் - கன்னடம் யஸ்வந்த சித்தால
(தமிழில் டி.பி.சித்தலிங்கய்யா)
10.தண்ணீர் - அசோகமித்திரன்
11.ஆறாவடு - சயந்தன்
12.A Soldier's Sketchbook - John Wilson
13.மிளிர்கல் -இரா.முருகவேள்
14.Silk Road - Kathy Ceceri
15.27-யாழ்தேவி - ஆசிரியர்: ஈழவாணி
16.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
17.குறத்தி முடுக்கு- ஜி.நாகராஜன்
18.What I talk When I talk about running - Haruki Murakami
19.Dance Dance Dance- Haruki Murakami
20.நெஞ்செல்லாம் நெருஞ்சி - சு.வேணுகோபால்
21.Emotional Wellness - Osho
22.First They Killed My Father: A Daughter of Cambodia Remembers - Loung Ung
23.Guns across America - Robert J Spitzer
24.Bitcoin Explained (Ultimate Guide to understanding Block chain
and investment in Currencies) - James Hartnett
25.Cryptocurreny for beginners - Michael Scott
26.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
27.How to Write Fiction without The Fuss - Lucy Mccaramer
28.எம்டன் செல்வரத்தினம் (சென்னையர் கதைகள்)- கிழக்கு பதிப்பகம்
29.Beyond the tiger mom : East-West parenting for the global age - Thiagarajan, Maya
30.நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ? - பேராசிரியர் த.செயராமன்



