தமிழ் வலைத்திரட்டி தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவித்திருக்கிறது.
Tuesday, March 31, 2020
Sunday, March 22, 2020
தமிழ்ச்சரம்.காம் - வரவேற்பு
தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) வலைத்திரட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கிறது. தளம் குறித்து நண்பர்கள்
வழியாக முகநூல், (பேஸ்ஃபுக்),வலைப்பதிவுகளில் பகிர்ந்ததைத் தவிர விளம்பரம் என்று எதுவும் பெரிதாக செய்யவில்லை.
ஆனாலும், தளத்திற்க்கு கிடைத்த வரவேற்பு உற்சாகமளிக்கிறது. ஆமாம், கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த எனது வலைப்பதிவுக்கான வருகை இப்போது வாரத்திற்க்கு 600+ என்றாகி இருக்கிறது. இந்தத் தளம் குறித்து வந்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து துறைவல்லுநர்களிடம் காட்டியபோது புதிய தளத்திற்கு இது நல்ல வரவேற்பு, 'அபாரம்' என்கிறார்கள். தளத்தை டெஸ்க்டாப் எனும் கம்யூட்டர் மூலமாக அதிகம் வாசித்திருக்கிறார்கள். வாரஇறுதி நாட்களை விட வார நாட்களில் வருகை அதிகமாக இருக்கிறது போன்ற தரவுகள் பலருக்கு சலிப்பாக இருக்கக் கூடும். ஆனால், ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஜெர்மனி,
பின்லாந்து, பெல்ஜியம், ஜப்பான் என 51 நாடுகளில் இருந்து தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
இருந்தாலும், இது முடிவல்ல. இது ஒரு சிறு தொடக்கம் என்பதையும் புரிந்து கொள்கிறேன். தமிழ்ச்சரம் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள்.
அதுபோல, தமிழ்ச்சரத்தின் வழியாக பார்வையாளர்களுக்கு பல்சுவை வாசிப்பு அனுபவமும், வலைப் பதிவர்களுடைய எழுத்துக்கு வெளிச்சமும் கிடைத்தால் அதுவே தளத்துக்குக் கிடைத்த முழு வெற்றியாகவும் இருக்கமுடியும். வரும் நாட்களில் பார்வையாளர்கள் விரும்பும் புதிய அம்சங்களை முடிந்தவரை அறிமுகம் செய்து தளத்தைத் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருப்போம்.
குறிப்பு - இது தமிழ்ச்சரம் குறித்து முகநூலில் எழுதிய பதிவு.
வழியாக முகநூல், (பேஸ்ஃபுக்),வலைப்பதிவுகளில் பகிர்ந்ததைத் தவிர விளம்பரம் என்று எதுவும் பெரிதாக செய்யவில்லை.
பின்லாந்து, பெல்ஜியம், ஜப்பான் என 51 நாடுகளில் இருந்து தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
இருந்தாலும், இது முடிவல்ல. இது ஒரு சிறு தொடக்கம் என்பதையும் புரிந்து கொள்கிறேன். தமிழ்ச்சரம் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள்.
அதுபோல, தமிழ்ச்சரத்தின் வழியாக பார்வையாளர்களுக்கு பல்சுவை வாசிப்பு அனுபவமும், வலைப் பதிவர்களுடைய எழுத்துக்கு வெளிச்சமும் கிடைத்தால் அதுவே தளத்துக்குக் கிடைத்த முழு வெற்றியாகவும் இருக்கமுடியும். வரும் நாட்களில் பார்வையாளர்கள் விரும்பும் புதிய அம்சங்களை முடிந்தவரை அறிமுகம் செய்து தளத்தைத் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டிருப்போம்.
குறிப்பு - இது தமிழ்ச்சரம் குறித்து முகநூலில் எழுதிய பதிவு.
Saturday, March 14, 2020
வனநாயகன் குறித்து-15 (வரவேற்கத்தக்க ஒரு படைப்பு)
வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..
"வனநாயகன் (மலேசிய நாட்கள்)" குறித்து ஜெர்மனி வாழ் சுபாஷிணி (தலைவர்- தமிழ் மரபு அறக்கட்டளை) அவர்கள் கடந்த டிசம்பரில் முகநூலில் எழுதியது. நன்றி சுபாஷிணி !!
முனைவர் சுபாஷிணி மலேசியத்தமிழர் என்பதை இங்கே குறிப்பிட்டுச்சொல்ல விரும்புகிறேன்.
**************************
ஸ்டுட்கார்ட் நகரில் இருந்து இஸ்தான்புல்.. அங்கிருந்து குவைத்.. என தமிழகத்திற்குப் பயணம் தொடர்கிறது. பயணத்தில் துணையாக ஆரூர் பாஸ்கர் எழுதிய வனநாயகன் - மலேசிய நாட்கள் நாவல். வித்தியாசமான கதை பொருளில் இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். வாசிக்க மிக சுவாரசியமாக இருக்கிறது. துறை சார்ந்த அனுபவங்கள்
, மலேசிய வாழ்க்கைச் சூழலின் பதிவுகள்.. இந்தியாவில் இருந்து மலேசியா செல்லும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.. அனுபவங்கள்.. என கதையை மிகச் சிறப்பாக அமைத்து இருக்கிறார் நூல் ஆசிரியர். இதுவரை பயணத்தில் நாவலின் பாதி பகுதியை முடித்து விட்டேன். மேலும் தொடர வேண்டும் சென்னை வந்தடையும் வரை..
************
நூல் கைக்கு வந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.. இடையில் கல்வெட்டுப் பயிற்சி, புலம்பெயர்வு தொடர்பான ஆய்வுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு நடவடிக்கைகள் சார்ந்த ஆய்வு, ஐரோப்பியர்களின் தமிழகம் தொடர்பான பங்களிப்புகள் பற்றிய ஆய்வு என பல்வேறுபட்ட வகையில் எனது கவனம் குவிந்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நாவலை வாசித்த அனுபவம் அண்மையில் கிட்டியது. ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் விமானநிலையத்தில் தொடங்கிய வாசிப்பு அடுத்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் வந்து அங்கு சில மணி நேர காத்திருப்பு... பின்னர் அங்கிருந்து குவைத்துக்குப் பயணம்... பின்னர் அங்கு ஓரிரு மணி நேர காத்திருப்பு.. பின் அங்கிருந்து சென்னை என பயணம் நீண்டிருந்தது. பயணத்தின் களைப்பைப் போக்கும் வகையில் நாவல் வாசிப்பு எனக்கு இனிய அனுபவமாக அமைந்தது.
நாவலின் தலைப்பு: வனநாயகன் -மலேசிய நாட்கள்
நாவலாசிரியர்: ஆரூர் பாஸ்கர்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
நாவலாசிரியர்: ஆரூர் பாஸ்கர்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
இந்த நாவலின் கதைக்களம் முழுவதுமாக மலேசிய சூழலில் பின்னப்பட்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. உள்ளூர் மலேசிய மக்கள் எழுதும் கதைக்கு மாற்றாக, இந்திய பின்புலத்தைக் கொண்ட ஒரு நாவலாசிரியர் எழுதிய நாவல் இது. இந்த நாவலின் கதைக்களம் தமிழகத்திலிருந்து வேலை தேடி மலேசியா வந்து அங்கு பணியாற்றும் நிபுணத்துவம் பெற்ற ஒரு துறைசார்ந்த வல்லுநர் ஒருவர் அனுபவிக்கும் பல்வேறு அனுபவங்களை கதையாக்கி காட்டும் ஒரு நாவலாக அமைந்துள்ளது.
கதையின் நாயகன் சுதா. அவனைச் சுற்றியே கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதை செல்கிறது. கதாநாயகனின் அனுபவங்களுக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம், மலேசிய வரலாறு, சுற்றுச்சூழல், தற்கால நிலை, வணிக சூழல், வணிகத்திற்குள் இயங்கும் அரசியல் தன்மை, மூன்று பெரும் இனங்களான தமிழர்,
பொதுவாகவே காதல், திருமணம், பிரிவு, குடும்ப உறவுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள், ஏமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் பெரும்பாலான நாவல்களில் இருந்து மாறுபட்ட உத்தியாக புலம்பெயர்ந்து தொழிலுக்காகச் செல்லும் தேர்ச்சி பெற்ற ஒரு வல்லுநர், புதிய நாட்டில் சந்திக்கும் பிரச்சனைகள், தொழிற்சார்ந்த போட்டிகள், அவை தருகின்ற சவால்கள் அவற்றை எவ்வாறு கதாநாயகன் எதிர்கொள்கிறார் என்ற வகையில் இந்த நாவல் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றது. மலேசிய சூழலில் தமிழ் மக்களின் உடை
அலங்காரம்,தோற்றம் பேச்சு வழக்கு, பல இனங்கள் ஒன்றுபட்டு வாழும் சூழலில் தமிழ் மக்களின் நிலை என்பவற்றை நூலாசிரியர் மிகக் கவனமாக கூர்ந்து கவனித்து குறிப்பெடுத்து அவற்றை பதிவாக்கி இருக்கின்றார். சிறு சிறு விஷயங்கள் கூட இந்த வகையில் இந்த நாவலில் பிரதிபலிக்கின்றன. மலேசியத் தமிழர்கள் ஒரு தனி இனம் என்ற அளவில் தோற்றம், உடை அலங்காரம், சிந்தனை சமூக செயல்பாடுகள் என இயங்கும் சூழல் கடந்த ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகால நிலையில் தமிழகத்திலிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. நாவல்கள் அல்லது கதைகளை எழுதுவோர் இதனை மிக முக்கியமாக கவனத்தில் கொண்டு எழுதும்போது தான் புதிய நிலத்தின் மண்ணின் மனம் நாவல்களில் சரியாக ஆவணப் படுத்தப் படும். இந்த நாவலில் ஆசிரியர் அதனை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்.
மலேசியாவில் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற எனக்கு கதாநாயகனின் சிந்தனையோட்டமாக வருகின்ற ஒவ்வொரு வரிகளும் என்னை மீண்டும் கோலாலம்பூர் நகருக்கே இழுத்துச் சென்று விடுகின்றன. அந்த அளவிற்கு மிக விரிவான விளக்கங்களாக ஒவ்வொரு சிறிய விஷயங்களும் கையாளப் பட்டிருக்கின்றன. கணினித்துறையில் நிலவுகின்ற தொழில்நுட்ப செயல்பாடுகள் பற்றி விவரிக்கும் வகையில் செல்லும் பகுதிகள் நாவலில் தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் பார்வையைக் காட்டுவதாக அமைவதால் நாவல் உத்தியில் தொழில்நுட்ப கூறுகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த எழுத்துமுறை வாசிக்கின்ற வாசகர்களுக்கு வழங்குகின்றது.
நூலின் பாதிப் பகுதியை வாசிக்கும் போதே கதாநாயகனுக்கு இறுதியில் என்னவாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பு குறையவில்லை. மிகச் சுருக்கமான ஒரு பகுதிதான் என்றாலும் இறுதிப்பகுதி மனநிறைவாக அமைந்திருக்கின்றது. பத்மா மனதில் நிறைந்து நிற்கின்றார்.
வனநாயகன் மலேசிய நாட்கள் - வரவேற்கத்தக்க ஒரு படைப்பு.
தொழில் நிமித்தம் பல நாடுகளுக்கு தமிழ்மக்கள் செல்கின்ற சூழல் அமைந்திருக்கின்ற இக்காலகட்டத்தில் தேவைக்கேற்ப எழுதப்பட்ட ஒரு நாவல் என்று நிச்சயம் கூறலாம். நாவலாசிரியர் ஆரூர் பாஸ்கருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
-சுபா
-சுபா
புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:
அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
Friday, February 28, 2020
வனநாயகன் குறித்து-14 (ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி)
வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..
"வனநாயகன் (மலேசிய நாட்கள்)" குறித்து ஃபிளாரிடா வாசகர் மருத்துவர் உதயகுமார் அவர்கள் முகநூலில் எழுதியது. நன்றி உதயகுமார் !!
**************************
ஆரூர் பாஸ்கரின் “வனநாயகன்-மலேசிய நாட்கள்“ வாசித்து முடித்துவிட்டேன். ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி இன்னமும் என் மனதில் வழிந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைவுகளோடு எனது வாசக அனுபவத்தைப் பகிர்கிறேன்.
மழையில் நனைந்த சாலை சற்று நேரத்தில் காய்ந்து மிகப் பிரகாசமாகத் துடைத்து எடுத்தது போல மாறிவிடும். அதுபோல, திரைக்கதை போல நகரும் ஆரூர் பாஸ்கரின் நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் புத்தம் புது காட்சிகளோடு மிக அழகாக நம் கண்முன்னால் விரிகிறது.
எடுத்த உடனேயே இது ஒரு கம்பியூட்டர் யுகக் கதை, நிச்சயம் ஓயிட் காலர் கிரைம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பிறகு ஐடி-யும் வங்கிகளும் வருவதால் இது வர்த்தகக் கதையோ இல்லை இது காதல் கதையாககூட இருக்குமோ என்றெல்லாம் கூட மூளை ஆரம்பத்தில் விவாதிக்கிறது. பிறகு கதையோட்டம் நமக்குப் பிடிபடுகிறது. இப்படியெல்லாம் கூட நடக்குமா? இந்தக் கம்பியூட்டர் யுகத்தில் ? அதுவும் தன் சுய நலத்திற்காக ? என்பதை அறியும் போது நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மை. இப்போதைய நிலைமை. கதையினூடே மலேசியாவில் கை நிறையச் சம்பாதிக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படிப் போய்க் கொண்டிருந்தது என்பதையும் ஆசிரியர் அழகாகச் சொல்லிவிடுகிறார். அதுபோல இந்திய வம்சாவளியில் பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே மலேசியா வந்துவிட்ட சீக்கியர்களின் சந்ததியரான டிரைவர் சிங் மறக்கமுடியாத மனிதராக இருக்கிறார்.
வனநாயகனில் நாயகனாக சுதா மட்டும் வரவில்லை நடு நடுவே (எழுத்தாளர்) சுஜாதாவும் வருகிறார். நம் மூளையைத் திறந்து கதையை உள்ளே போடுவதிலும் சுஜாதா மாதிரிதான் ஆரூர் பாஸ்கர் வல்லவராக இருக்கிறார். அதோடு அந்தக்
காலத்திலேயே மலேசியா போன தமிழர்கள் பலர் இன்னமும் பழமை மாறாமல் திண்ணையில் அமர்ந்து பெரிய பைண்டிங் செய்த அக்கவுண்ட் புத்தகங்களைச் சிறு மேஜைகளின்மேல் வைத்துக்கொண்டு கணக்கு வழக்குப் பார்க்கிறார்கள், லாபத்தைப் பற்றி கவலைப் படாமல் மலிவான விலையில் சுவையான நல்ல இட்லி சாம்பார் விற்கிறார்கள் என்பது போன்ற பல சுவையான விவரங்களை நான் அறிந்துகொண்டேன்.
அதுபோல, நல்ல கதை வாசித்த அனுபவத்தோடு மலேசியாவில் பார்க்கவேண்டிய இடங்களை ஆர அமர சுற்றிப்பார்த்த அனுபவமும் நாவலை வாசித்த போது கிடைத்தது. மலேசியா போக எண்ணுபவர்கள், அங்கு என்ன என்ன பார்க்கவேண்டும் என அறிய விரும்புபவர்கள் இந்த நாவலை ஒரு வழிகாட்டியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக வனநாயகனாக சித்தரிக்கப்படும் ஒராங்குட்டான் குரங்கின் பிறப்பிடமும் அதன் வாழ்விடங்களும் தற்போது எப்படியெல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு புரியுமாறு கதையோடு பிணைந்து வழங்கியதும் சிறப்பு.
கதையில் மலேசியத் தமிழ்ப்பெணணாக அறிமுகமாகும் பத்மா வாசிப்பவர்களின் மனதைவிட்டு இறங்க மறுக்கிறாள். அதற்கு அவளுடைய குடும்பச் சூழல் மட்டுமல்ல, அவள் சுதாவிடம் காட்டும் அன்பும் அக்கறையும் நம்மை அவளுக்காக யாரிடமும் வாதாடச் சொல்கிறது. நாவலின் முடிவு மிகவும் திருப்திகரமாக இருந்தது.
மிக அருமையான கதையமைப்பு, நெஞ்சைத்தொடும் பாத்திரங்கள் என வனநாயகனில் ஆரூர் பாஸ்கர் வாசகர்களுக்கு ஓர் அறுஞ்சுவை விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தின் சுவை என்றும் நாவிலும் மனதிலும் தொக்கி நிற்கும் திருப்தியோடு நாவலை வாசித்து முடித்துவிட்டு கீழே வைத்தேன். வாழ்த்துகள் !
அன்புடன்,
உதயகுமார்
உதயகுமார்
புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:
அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
Wednesday, February 26, 2020
தமிழ்ச்சரம் - ஓர் எதிர்நீச்சல்
பல ஆண்டுகளாக தமிழில் ஒரு வலைத்திரட்டி இருந்தது. பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தத் தளம் செயல்பட்டுக் கொண்டிருந்தவரையில் பெரிய பிரச்சனைகள் இல்லை , அனைவரும் தமிழ் வலைத்தளங்களை வாசிப்பதற்கு என இணையத்தில் ஓர் இடம் இருந்தது. அது கடந்த சில மாதங்களுக்கு முன் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட பின், வலைத்தள எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே இருந்த ஒரு நல்ல தொடர்பு அறுபட்டு விட்டது என்று கூட சொல்லாம். அதனால், பல வலைத்தளங்களின் வருகைகள் (ஹிட்ஸ்) வெகுவாகக் குறைந்தன. உற்சாகம் இழந்த சிலர் வலைதளங்களில் இருந்து வெளியேறியதும் கூட நடந்தது.
அந்த நிலையில் தான் நியூயார்க் நண்பர் ஆல்பி முதன் முதலாக என்னைத் தொடர்புகொண்டு தமிழில் நல்ல வலைத்திரட்டிக்கான தேவையை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார் (நன்றி நண்பரே). பிறகு தமிழ்நாடு, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் என்னிடம் இதுபற்றி பேசினார்கள். அதன் தொடர்ச்சியாகவே, தமிழில் வலைத்திரட்டி ஒன்றை நிறுவும் பணியைக் கையில் எடுத்தேன். இணையதளம் என்றதும் அது ஏதோ காமா சோமா என்றில்லாமல் தொழில்நுட்பத்திலும், பயன்பாட்டிலும் சிறந்ததாக வரவேண்டும் எனத் திட்டமிட்டு ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்களைத் தேடிப்பிடித்தேன். அப்படிக் கிடைத்தவர்தான் ராஜா.
கடந்த 6 மாதங்களாக நடந்து முடிந்த இந்த வேலையில் பல சவால்கள். ஆமாம், ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்குஅனுபவங்கள். பணத்தை விடுங்கள்.அது பெரிய பிரச்சனை இல்லை. எத்தனை இடர்பாடுகள். வேலைசெய்த ஆட்கள் !? மனிதர்கள் எத்தனை விதமாக இருக்கிறார்கள் ?. நியூஜெர்சியில் இருந்து தளவடிவமைப்புச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அலுவலக நெருக்கடி காரணமாக திடீரென பாதியில் விலகிவிட்டார். பிறகு, வேறு ஆட்களைத் தேட வேண்டியதாகி விட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள். மதுரையில் இருந்து வெப்-டிசைனர் என நண்பரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நபர் 12 இமெயில்களில் முன்னும் பின்னுமாக கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டார். இறுதியாக, தமிழ் ஃபான்ட் எழுதி பழக்கமில்லை எனச் சொன்ன அந்த நபர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை. அத்தோடு தொடர்பு நின்று விட்டது.
ஒன்று மட்டும் உறுதி. நம்மூர் ஆட்களில் பலருக்கு இதுபோல முடியாது ஒத்துவராது, ஆர்வமில்லை ( How to say No) போன்ற விசயங்களைச் சொல்ல கற்றுத்தர வேண்டும் போலிருக்கிறது. பிறகு, ஒருவழியாக அந்த வேலையைக் கல்கத்தாவில் இருந்து தொடர்புகொண்ட ஒரு பெங்காலி பெண்னை வைத்து செய்து முடித்தோம்.
நான் தொழில் நுட்பத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். எத்தனையோ கோடி மதிப்புமுள்ள பணிகளை ஆட்களை வைத்து கச்சிதமாக செய்து முடித்திருக்கிறேன். ஆனால், ஒரே வித்தியாசம்
சொல்லி வைத்தாற் போல அவை எல்லாம் அலுவலகத்திற்காக செய்த புராஜெக்ட்கள். அனைவரும் முழுநேர பணியாளர்கள்.
சொந்த வேலை, பகுதிநேர ஊதியம் என்று வரும்போது !? அட, இப்படியும் மனிதர்களா என ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்கள். நல்லவேளையாக எனது இந்தப் பயணத்தில் நண்பர் ராஜா (நீச்சல்காரன்) கடைசிவரைத் துணையிருந்தார். தளத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அவர்தான் பார்த்துக்கொண்டார். இணையதள பயன்பாடுகளில் நல்ல அனுபவம் உள்ளவர். தமிழில் வாணி எனும் பிழைதிருத்தியைக் கூட சொந்தமாக எழுதியிருக்கிறார். (அதற்காக, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய "கணிமை விருது" பெற்றவர்).
இதோ, பல சவால்களைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு கடந்த வாரம் அறிமுகமான தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி.
இதுவரைத் தளத்தைப் பார்வையிட்டு வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி. அமெரிக்காவில் இருந்து அர்ஜூன் தொழில்நுட்ப உதவி செய்தார். சென்னை நண்பர் அரவிந்த் விளம்பர பேனர் வடிவமைப்பில் உதவினார். அதுபோல, தொடக்கத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தருவது, டெஸ்டிங் எனும் சோதனை ஒட்டத்தில் பங்கெடுப்பது என உலகின் பல மூலைகளில் இருந்து ஆர்வத்தோடு பங்கெடுத்த
நெருங்கிய நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து அன்பர்கள் 'திண்டுக்கல்'- தனபாலன், சரவணன் போன்றவர்களுக்கு நன்றி !
கட்டணமில்லாத சேவையாக அறிமுகமாகி இருக்கும் இந்தத் தளம் உலகத்தமிழர்களின் தரமான பதிவுகள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், ஆழமான விவாதங்கள் வழியாக தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக பரிமாறும் கருத்துமேடையாக இருக்கும், இருக்கவேண்டும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.
****************
அந்த நிலையில் தான் நியூயார்க் நண்பர் ஆல்பி முதன் முதலாக என்னைத் தொடர்புகொண்டு தமிழில் நல்ல வலைத்திரட்டிக்கான தேவையை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார் (நன்றி நண்பரே). பிறகு தமிழ்நாடு, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் என்னிடம் இதுபற்றி பேசினார்கள். அதன் தொடர்ச்சியாகவே, தமிழில் வலைத்திரட்டி ஒன்றை நிறுவும் பணியைக் கையில் எடுத்தேன். இணையதளம் என்றதும் அது ஏதோ காமா சோமா என்றில்லாமல் தொழில்நுட்பத்திலும், பயன்பாட்டிலும் சிறந்ததாக வரவேண்டும் எனத் திட்டமிட்டு ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்களைத் தேடிப்பிடித்தேன். அப்படிக் கிடைத்தவர்தான் ராஜா.
கடந்த 6 மாதங்களாக நடந்து முடிந்த இந்த வேலையில் பல சவால்கள். ஆமாம், ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்குஅனுபவங்கள். பணத்தை விடுங்கள்.அது பெரிய பிரச்சனை இல்லை. எத்தனை இடர்பாடுகள். வேலைசெய்த ஆட்கள் !? மனிதர்கள் எத்தனை விதமாக இருக்கிறார்கள் ?. நியூஜெர்சியில் இருந்து தளவடிவமைப்புச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அலுவலக நெருக்கடி காரணமாக திடீரென பாதியில் விலகிவிட்டார். பிறகு, வேறு ஆட்களைத் தேட வேண்டியதாகி விட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள். மதுரையில் இருந்து வெப்-டிசைனர் என நண்பரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நபர் 12 இமெயில்களில் முன்னும் பின்னுமாக கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டார். இறுதியாக, தமிழ் ஃபான்ட் எழுதி பழக்கமில்லை எனச் சொன்ன அந்த நபர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை. அத்தோடு தொடர்பு நின்று விட்டது.
ஒன்று மட்டும் உறுதி. நம்மூர் ஆட்களில் பலருக்கு இதுபோல முடியாது ஒத்துவராது, ஆர்வமில்லை ( How to say No) போன்ற விசயங்களைச் சொல்ல கற்றுத்தர வேண்டும் போலிருக்கிறது. பிறகு, ஒருவழியாக அந்த வேலையைக் கல்கத்தாவில் இருந்து தொடர்புகொண்ட ஒரு பெங்காலி பெண்னை வைத்து செய்து முடித்தோம்.
நான் தொழில் நுட்பத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். எத்தனையோ கோடி மதிப்புமுள்ள பணிகளை ஆட்களை வைத்து கச்சிதமாக செய்து முடித்திருக்கிறேன். ஆனால், ஒரே வித்தியாசம்
சொல்லி வைத்தாற் போல அவை எல்லாம் அலுவலகத்திற்காக செய்த புராஜெக்ட்கள். அனைவரும் முழுநேர பணியாளர்கள்.
சொந்த வேலை, பகுதிநேர ஊதியம் என்று வரும்போது !? அட, இப்படியும் மனிதர்களா என ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்கள். நல்லவேளையாக எனது இந்தப் பயணத்தில் நண்பர் ராஜா (நீச்சல்காரன்) கடைசிவரைத் துணையிருந்தார். தளத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அவர்தான் பார்த்துக்கொண்டார். இணையதள பயன்பாடுகளில் நல்ல அனுபவம் உள்ளவர். தமிழில் வாணி எனும் பிழைதிருத்தியைக் கூட சொந்தமாக எழுதியிருக்கிறார். (அதற்காக, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய "கணிமை விருது" பெற்றவர்). இதோ, பல சவால்களைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு கடந்த வாரம் அறிமுகமான தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி.
இதுவரைத் தளத்தைப் பார்வையிட்டு வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி. அமெரிக்காவில் இருந்து அர்ஜூன் தொழில்நுட்ப உதவி செய்தார். சென்னை நண்பர் அரவிந்த் விளம்பர பேனர் வடிவமைப்பில் உதவினார். அதுபோல, தொடக்கத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தருவது, டெஸ்டிங் எனும் சோதனை ஒட்டத்தில் பங்கெடுப்பது என உலகின் பல மூலைகளில் இருந்து ஆர்வத்தோடு பங்கெடுத்தநெருங்கிய நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து அன்பர்கள் 'திண்டுக்கல்'- தனபாலன், சரவணன் போன்றவர்களுக்கு நன்றி !
கட்டணமில்லாத சேவையாக அறிமுகமாகி இருக்கும் இந்தத் தளம் உலகத்தமிழர்களின் தரமான பதிவுகள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், ஆழமான விவாதங்கள் வழியாக தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக பரிமாறும் கருத்துமேடையாக இருக்கும், இருக்கவேண்டும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.****************
Sunday, February 23, 2020
உலக கவனம் பெற்ற ஓராங் ஊத்தான் புகைப்படம்
ஓராங் ஊத்தான்/ஒராங்குட்டான் (Orangutan) குரங்கு ஒருவனுக்கு கைகொடுப்பதுபோல் உள்ள இந்தப் புகைப்படம் உலக கவனம் பெற்றிருக்கிறது. அதற்கு முன் "போர்னியோ" தீவு பற்றி ஒரு சிறிய அறிமுகம்.
மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் இருக்கும் "போர்னியோ" ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவு. எனது 'வனநாயகன் -மலேசிய
நாட்கள்' வாசித்தவர்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ பற்றி தெரிந்திருக்கும்.
மிகப் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட இந்தத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் இருக்கிறது. மேற்சொன்ன மூன்று நாடுகளும் போட்டிபோட்டு இந்தத் தீவின் இயற்கை வளத்தைப் பல்லாண்டுகளாக சீரழித்துவருகின்றன. அதனால் அந்த தீவில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, போர்னியாவின் தனிச்சிறப்பான ஒராங்குட்டான் குரங்குகள். அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வனநாயன் நாவலின் அட்டைப்பட நாயகனும் ஒரு ஒராங்குட்டான் குரங்கே.
மனிதர்களுக்கு அடுத்து அறிவு கொண்ட இனமாக கருதப்படும் இந்த ஓரங்குட்டான் இனக் குரங்குகள் விவசாயத்திற்கு இடையூறு செய்வதாக, மாமிசத்திற்காக, அதனுடைய அழகான கறுப்பு குட்டிகளுக்காக, விபச்சாரத்திற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்படுகின்றன. இப்படி மனித மிருகங்களால் வேட்டையாடப்படுவதால் தனது வாழ்விடங்கள் சூரையாடப்படுவதால் கடந்த மூன்று தலைமுறைகளுக்குள் மட்டும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை 80% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சமீபத்தில் காட்டில் வந்து சேற்றில் சிக்கிய மனிதன் ஒருவனுக்குக் கை கொடுத்து உதவுவது போலோரு புகைப்படம் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்தமாத தொடக்கத்தில், ஏதோ காரணங்களுக்காக காட்டுக்குள் வந்த ஒரு நபர் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கிக்கொண்டாராம். அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவருடைய நிலையைப் பார்த்த ஒரு ஓரங்குட்டான் எங்கிருந்தோ ஓடி வந்து தனது கைகளை நீட்டி அவர் கரைக்கு வர உதவியிருக்கிறது.
இப்படிச் சேற்றில் சிக்கிய மனிதன் அருவாள் போலோரு ஆயுதத்தைக் கையில் வைத்து இருந்தாலும் அந்த மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும் போது ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டிய அந்தக் குரங்கின் செயலை பலர் இணையத்தில் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர் 'இது கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சி'. 'மனிதன் மறந்த கருணையை இன்னமும் குரங்குகள் நினைவில் வைத்திருக்கின்றன'. 'விலங்குகள் மனிதர்களைப் போலவும் மனிதர்கள் குரங்குகள் போலவும் நடந்து கொள்கிறோம்' என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். நல்லவேளை, இதெல்லாம் அந்தக் குரங்கிற்கு எதுவும் புரியப் போவதுமில்லை. புரிந்தாலும் அது நம்மைப்போல அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதுமில்லை.
இதுபோன்ற விலங்குகள் நம்மிடம் யாசித்து கேட்பதெல்லாம் குறைந்த பட்சம் எங்களையும் இந்த பூமியில் வாழவிடுங்களேன் என்பதுதான். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையையே அடக்கி தெருவில் பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் மனிதனுக்கு இந்தக் குரங்குகளின் குரல் கேட்கவா போகிறது ?
மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் இருக்கும் "போர்னியோ" ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவு. எனது 'வனநாயகன் -மலேசிய
நாட்கள்' வாசித்தவர்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ பற்றி தெரிந்திருக்கும்.
மிகப் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட இந்தத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் இருக்கிறது. மேற்சொன்ன மூன்று நாடுகளும் போட்டிபோட்டு இந்தத் தீவின் இயற்கை வளத்தைப் பல்லாண்டுகளாக சீரழித்துவருகின்றன. அதனால் அந்த தீவில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, போர்னியாவின் தனிச்சிறப்பான ஒராங்குட்டான் குரங்குகள். அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வனநாயன் நாவலின் அட்டைப்பட நாயகனும் ஒரு ஒராங்குட்டான் குரங்கே.மனிதர்களுக்கு அடுத்து அறிவு கொண்ட இனமாக கருதப்படும் இந்த ஓரங்குட்டான் இனக் குரங்குகள் விவசாயத்திற்கு இடையூறு செய்வதாக, மாமிசத்திற்காக, அதனுடைய அழகான கறுப்பு குட்டிகளுக்காக, விபச்சாரத்திற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்படுகின்றன. இப்படி மனித மிருகங்களால் வேட்டையாடப்படுவதால் தனது வாழ்விடங்கள் சூரையாடப்படுவதால் கடந்த மூன்று தலைமுறைகளுக்குள் மட்டும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை 80% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சமீபத்தில் காட்டில் வந்து சேற்றில் சிக்கிய மனிதன் ஒருவனுக்குக் கை கொடுத்து உதவுவது போலோரு புகைப்படம் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்தமாத தொடக்கத்தில், ஏதோ காரணங்களுக்காக காட்டுக்குள் வந்த ஒரு நபர் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கிக்கொண்டாராம். அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவருடைய நிலையைப் பார்த்த ஒரு ஓரங்குட்டான் எங்கிருந்தோ ஓடி வந்து தனது கைகளை நீட்டி அவர் கரைக்கு வர உதவியிருக்கிறது.
இப்படிச் சேற்றில் சிக்கிய மனிதன் அருவாள் போலோரு ஆயுதத்தைக் கையில் வைத்து இருந்தாலும் அந்த மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும் போது ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டிய அந்தக் குரங்கின் செயலை பலர் இணையத்தில் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர் 'இது கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சி'. 'மனிதன் மறந்த கருணையை இன்னமும் குரங்குகள் நினைவில் வைத்திருக்கின்றன'. 'விலங்குகள் மனிதர்களைப் போலவும் மனிதர்கள் குரங்குகள் போலவும் நடந்து கொள்கிறோம்' என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். நல்லவேளை, இதெல்லாம் அந்தக் குரங்கிற்கு எதுவும் புரியப் போவதுமில்லை. புரிந்தாலும் அது நம்மைப்போல அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதுமில்லை.
இதுபோன்ற விலங்குகள் நம்மிடம் யாசித்து கேட்பதெல்லாம் குறைந்த பட்சம் எங்களையும் இந்த பூமியில் வாழவிடுங்களேன் என்பதுதான். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையையே அடக்கி தெருவில் பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் மனிதனுக்கு இந்தக் குரங்குகளின் குரல் கேட்கவா போகிறது ?
Sunday, February 16, 2020
இர்மா (அந்தஆறுநாட்கள்) -நூல் வெளியீடு
கடந்த மாதம் (ஜனவரி-18, சனிக்கிழமை) மத்திய ஃபிளாரிடா முத்தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா நிகழ்வில் எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" புதினம் (நாவல்), திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுடைய சிறப்பான அறிமுகத்துடன் வெளியிடப்பட்டது.
தாம்பா தமிழ் ஸ்நேகம் தேவா அன்பு வெளியிட, அர்லாண்டா தமிழ்ச்சங்க முன்னோடிகளான மருத்துவர் திரு சம்பத் சண்முகம், வெண்- வீராசாமி பெற்றுக்கொண்டனர்.
வாழ்த்திப் பேசிய மருத்துவர் சம்பத், தனது கல்லூரி நாட்களில் கோவையில் எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை நூல் வெளியீட்டில் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்தார். அடுத்துப்
பேசிய வெண், அர்லாண்டா தமிழ்ச்சங்க 30 ஆண்டு வரலாற்றில் இது முதல் நூல் வெளியீடு என்பதைச் சுட்டிக் காட்டினார். நிகழ்வை நண்பர் விஜயசெந்தில் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
பேசிய வெண், அர்லாண்டா தமிழ்ச்சங்க 30 ஆண்டு வரலாற்றில் இது முதல் நூல் வெளியீடு என்பதைச் சுட்டிக் காட்டினார். நிகழ்வை நண்பர் விஜயசெந்தில் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
இறுதியாக, நான் அனைவருக்கும் நன்றி சொல்லி பேசினேன். நிகழ்ச்சி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு மாட்டிக்கொண்டதால் என்னால் சவகாசமாக பேச இயலவில்லை. அதிகபட்சம் 2-3 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன். ஆனால், யோசித்து வைத்திருந்த விசயங்களைப் பிசிரில்லாமல் பேசினேன் என்றுதான் நினைக்கிறேன்.
இந்தச் சிறிய விழா பார்வையாளர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால் தான், மேடையை விட்டு இறங்கியபின் பலர் தனிப்பட்ட முறையில் சந்தித்து சுய அறிமுகம் செய்து கொண்டு அன்பு பாராட்டிச் சென்றனர் என கற்பிதம் செய்துகொள்கிறேன்.
இப்படிச் சந்திக்கும் முகம் அறியா தமிழ் நெஞ்சங்களின் கண்களில் கசியும் அன்பு நம்மை மேலும் உற்சாகப்படுத்தி இயங்கச் செய்கிறது.
#இர்மா_அந்தஆறுநாட்கள்
#இர்மா_அந்தஆறுநாட்கள்
Subscribe to:
Posts (Atom)



